search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகாவிஷ்ணு"

    • ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.
    • இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற வைணவ தலங்கள் உள்ளன.

    அந்த வைணவ தலங்களில் மிகச் சிறப்பானவற்றை 108 திவ்ய தேசங்களாக நமது முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

    இந்த திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.

    அந்த வகையில் தசாவதாரம் நிகழ்ந்த இடங்களாக கருதப்படும் புண்ணிய தலங்கள் உயர்ந்த இறைஆற்றல் கொண்டவை.

    இதில் மகா விஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும்.

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது.

    இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    இந்த தலத்தில்தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டு வந்ததன் பின்னணியில் இந்த அவதார கதை அமைந்துள்ளது.

    ஆனால் நாகலாபுரம் பகுதியில் கடல் எதுவும் கிடையாது. அங்கிருந்து பழவேற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    எனவே இந்த அவதாரம் நிகழ்ந்த போது நாகலாபுரம் பகுதி கடலாக இருந்திருக்கலாம் என்றும், நாளடைவில் கடல் பின்வாங்கியதால் ஊர்கள் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நாகலாபுரத்தில் அமைந்துள்ள வேதநாராயண சுவாமி ஆலயம் முதல் அவதாரம் நிகழ்ந்த தலம் மட்டுமின்றி மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    ஆகம அடிப்படையில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஆலய அமைப்பு பக்தர்களுக்கு புதிய தகவல்களை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு மிக எளிதாக சென்று வரலாம்.

    இந்த ஆலயம் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    • வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர்.
    • கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன.

    வட இந்தியர் சிலர் புத்தரை பத்து அவதாரங்களுள் ஒருவராக கருதுகின்றனர்.

    பாகவத புராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது.

    தசாவதார திருக்கோவில்

    தாசாவதார திருக்கோவில் திருவரங்கத்தில் அமைந்துள்ளது.

    இத்தலத்தில் பெருமாளின் பத்து அவதாரங்களும் மூலவர்களாக உள்ளனர்.

    மச்சவதாரம், கூர்மவதாரம், வராகவதாரம், நரசிம்மவதாரம் ஆகிய நான்கு அவதாரங்கள் சங்குசக்கரத்துடன் காட்சியளிக்கின்றன.

    வாமன அவதாரம் கையில் குடையுடனும், பரசுராம அவதாரம் கையில் கோடாரியுடனும், ராம அவதாரம் வில்லம்புடனும், பலராமன் அவதாரம் கலப்பையுடனும், கிருஷ்ணவதாரம் கையில் வெண்ணையுடனும் இருக்கின்றன.

    கல்கி அவதாரம் கையில் கேடயமும், வாளும் உள்ளன.

    திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ராஜகோபுரம், மதில்சுவர் கட்டுமானப் பணிகளை செய்த திருமங்கையாழ்வாரின் விருப்பத்திற்கிணங்க இத்தலத்தில் இரங்கநாதர் பத்து அவதார திருக்கோலத்திலும் காட்சி தந்ததாக தலவரலாறு கூறுகிறது.

    • கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.
    • கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி, விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும்.

    கல்கி பகவான் கலியுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பாராவார் என்பது ஒரு கூற்று.

    கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

    மனிதன் என்ற நிலையை அடைந்த வரை ஆராய்ந்து வந்த சார்லஸ் டார்வினின் ஆராய்ச்சி அத்துடன் நின்று விட்ட போதிலும் பரிணாம வளர்ச்சி தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

    அதற்கு ஒரு முடிவு இல்லை.

    கல்கி அவதாரம் கலியுகத்தின் முடிவில் திருமால் எடுக்கும் கடைசி அவதாரமாக புராணம் கூறுகிறது.

    ஆயுதங்களும் வாகனங்களும் கொண்ட அவதாரமான கல்கி தினம் தினம் மனிதன் சிந்தனையில் வளர்ந்து கொண்டிருப்பதையும், விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் அவன் மகாசக்தியாக மாறுவதையும் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

    • இது திருமால் எடுத்த ஒன்பதாவது அவதாரமாகும்.
    • தன் தாய்மாமனான கம்சனை அழிக்க எடுத்த அவதாரமாகும்

    இது திருமால் எடுத்த ஒன்பதாவது அவதாரமாகும்.

    தன் தாய்மாமனான கம்சனை அழிக்க எடுத்த அவதாரமாகும்

    விவசாயம் செய்வதோடு கால்நடைகளையும் மேய்த்து வாழும் மனிதன் பரிணாம வளர்ச்சியின் அடுத்தக் கட்டம்.

    இராம அவதாரத்தில் முழுமையான மனிதன், அதாவது புருஷோத்தமன், என்ற நிலையை அடைந்த பின்

    பலராம அவதாரத்தில் சற்று இறை தன்மையை எட்டி, கிருஷ்ணாவதாரத்தில் முழுமையாக இறை தன்மையைப்

    பெற்று விடுவதாக தசாவதாரத்தில் காட்டப்படுகிறது.

    மனிதனின் உணர்வின் உயர்வுகள் டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டில் அலசப்படவில்லை என்றாலும்

    தசாவதாரத்தில் இந்த உயர்வுகள் துல்லியமாய் வளர்ச்சி அடைவதும் காட்டப்பட்டுள்ளது என்பது சிறப்பு.

    • இது இராவணனை வதம் செய்ய திருமால் எடுத்த அவதாரமாகும்.
    • காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை.

    காட்டிலும், நாட்டிலுமாக மாறி மாறி வசித்தது மனிதனின் அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை.

    இராவணனைக் கொல்ல திருமால் எடுத்த இராமாவதாரத்தில் இராமர் அப்படியே காட்டிலும், நாட்டிலும் வாழ்ந்து வருகிறார்.

    இந்த அவதாரத்தில் அறிவு கூர்மைக்கும், அசாத்திய பலத்திற்கும் பெயர் போன அனுமன் என்ற முக்கிய கதாபாத்திரம் மூலம் குரங்கினத்தின் அபார வளர்ச்சியும் சுட்டிக் காட்டப்படுகிறது.

    நீர் வாழ்வன, நீர்-நிலம் வாழ்வன, நிலம் வாழ்வன, மிருகம்-மனிதன் கலந்த இனம் என்று படிப்படியாய்

    தசாவதாரப் பரிணாம வளர்ச்சியில் அடுத்ததாக முழு மனிதன் என்று காட்டப்பட்டாலும்,

    டார்வினின் குரங்கின் அபார வளர்ச்சி பின் மனிதனாக முடிந்தது என்னும் கோட்பாடு

    வேறு விதத்தில் இராமாவதாரத்தில் சுட்டிக் காட்டப்படுகிறது.

    இதில் மனிதனான இராமனுக்கு இணையாகவும் உதவியாகவும் நடந்து கொள்ளும் சுக்ரீவன்,

    அனுமன் போன்ற கதாபாத்திரங்களில் குரங்கினங்களின் மிக உயர்ந்த நிலை வெளிப்படுகிறது.)

    • இது திருமாலின் எட்டாவது அவதாரமாகும்
    • கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.

    காட்டை முழுமையாக விட்டு விட்டு நாட்டில் வாழ ஆரம்பித்த மனிதன் தன் பசியின் தேவையை

    தீர்த்துக் கொள்வதற்காக உழுது பயிரிட்டு விவசாயம் செய்து வாழ்ந்தான் என்பது மனிதனின்

    அடுத்த பரிணாம வளர்ச்சி நிலை.

    திருமாலின் எட்டாவது அவதாரமான பலராமர் விவசாயம் செய்வதைக் குறிக்கும் விதத்தில்

    கலப்பையைத் தன் தோளில் சுமந்து கொண்டிருக்கிறார்.

    • கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்.
    • இந்த அவதாரத்தில் பரசுராமர் போர்க்குணம் கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

    ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகைக்கும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக் கூண்டோடு அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம் இது.

    ஆதிமனிதன் மிருகங்களையும் எதிரிகளையும் மூர்க்கமாகத் தாக்கி தன் சக்தியை ஸ்திரப்படுத்திக் கொண்டது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை.

    தசவதாரத்தின் ஆறாவது அவதாரமான பரசுராம அவதாரத்தில் திருமால் மிகவும் மூர்க்க மனிதராக சித்தரிக்கப்பட்டுள்ளார்..

    கோடாரி ஆயுதத்தினை சிவனிடமிருந்து பெற்ற மனிதராக பரசுராமர் புராணங்களில் குறிப்பிடப்படுகிறார்.

    இந்த அவதாரத்தில் பரசுராமர் போர்க்குணம் கொண்டவராகக் காட்டப்படுகிறார்.

    • இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார்.
    • மகாபலியின் கர்வத்தை அழிக்கவும் திருமால் எடுத்த ஐந்தாவது அவதாரம் இது.

    காசிபன், அதிதி ஆகியோருக்கு வாமன உருவில் பிறந்து, மாபலிச் சக்கரவர்த்தியை யாசித்து, தானம் கேட்டு, அவரை வதை செய்வது வாமன அவதாரம்.

    பாதி மனிதன், பாதி மிருகம் என்ற நிலையைத் தாண்டி முழு மனிதனாக மாறுவது பரிணாம வளர்ச்சியின் அடுத்த நிலை.

    இதில் மனிதன் முழு வளர்ச்சி அடைந்து விடாத குள்ள உருவமாக வாமனர் காட்சி அளிக்கிறார்.

    அசுரர்களின் அரசனான மகாபலியின் ஆதிக்கத்தில் இருந்து தேவர்களைக் காக்கவும், மகாபலியின் கர்வத்தை அழிக்கவும் திருமால் எடுத்த ஐந்தாவது அவதாரம் இது.

    • நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும்.
    • தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

    நரசிம்ம அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும்.

    இதில் இவர் சிங்கத்தின் தலையையும், மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார்.

    நரசிம்மரின் உருவம் சிங்க முகத்துடனும், நகங்களோடும், மனித உடம்போடும் தோற்றமளிக்கிறது.

    பல வைஷ்ணவர்கள் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர்.

    தனது பக்தர்களைத் தக்க தருணத்தில் வந்து காக்கும் கடவுளாக இவர் கருதப்படுகிறார்.

    நிலவாழ்பவைகளாக இருந்த விலங்கினம் பரிணாம வளர்ச்சியில் அடுத்த நிலையாக சிந்தனை திறன் பெற்று மனிதன் பாதி மிருகம் பாதியாக இருந்த தொடக்க நிலையை இந்த அவதாரம் குறிக்கிறது.

    இரணியன் என்ற அரக்கனை அழித்து உலகைக் காக்கவும், பிரகலாதன் என்ற பக்தனின் நம்பிக்கையை மெய்ப்படுத்தவும் திருமால் எடுத்த இந்த நான்காவது அவதாரத்தில் அவர் மனித உடலும், சிங்கத்தின் முகமும் கொண்டிருந்தார்.

    • வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.
    • இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.

    வராக அவதாரம் விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும்.

    இதில் இவர் காட்டுப்பன்றி அவதாரம் எடுத்தார்.

    பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனுடன், வராக அவதாரத்தில், விஷ்ணு ஆயிரம் ஆண்டுகள் போர்செய்து வென்றார் என்பது ஐதிகம்.

    பரிணாம வளர்ச்சியின் கொள்கைப்படி நீரிலும் நிலத்திலும் வாழ்ந்து கொண்டு இருந்தவை நிலத்தில் வாழ்பவையாக ஒரு காலக் கட்டத்தில் இருந்தவை முற்றிலும் நிலத்தில் வாழ்பவையாக மாறின என்று சொல்கிறார்கள்.

    அதற்கு ஏற்றபடி, இரணியாசுரன் எனும் அரக்கனிடமிருந்து பூமியை காப்பற்ற திருமால் எடுத்த மூன்றாவது அவதாரமாக வராக அவதாரத்தை புராணங்கள் கூறுகின்றன.

    • கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின் படி, விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.
    • எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது.

    கூர்ம அவதாரம் வைணவ சமய நம்பிக்கையின் படி, விஷ்ணு எடுத்த இரண்டாம் அவதாரம் ஆகும்.

    இதில் இவர் ஆமை அவதாரம் எடுத்தார்.

    இது சத்திய யுகத்தில் நடந்ததென்பது தொன்னம்பிக்கை (ஐதிகம்).

    கூர்மம் என்றால் ஆமை என்று பொருள்.

    பரிணாம வளர்ச்சியில் நீர் வாழும் உயிரினம் நீர், நிலம் இரண்டிலும் வாழும் உயிரினமாக மாற்றம் அடையும் என்று உள்ளது.

    எனவே நீர் நிலம் இரண்டிலும் வாழக்கூடிய ஆமை அதற்கு ஏற்றதாக உள்ளது.

    பாற்கடலை தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து கடையும் போது மேரு மலையைத் தாங்கி நிறுத்த திருமால் இந்த கூர்மாவதாரம் எடுத்ததாக புராணங்கள் சொல்கின்றன.

    • மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.
    • மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.

    உலகில் அதர்மம் தலையெடுக்கும்போது விஷ்ணு உலகில் அவதரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர்.

    விஷ்ணுவின் பத்து அவதாரங்களாக கூறப்படுபவை பின்வருவன:

    மச்ச அவதாரம்

    மச்ச அவதாரம் விஷ்ணுவின் முதல் அவதாரமாகும்.

    மச்சம் என்ற சமஸ்கிருத சொல், தமிழ் மொழியில் மீன் எனப் பொருள் தரும்.

    இந்த அவதாரத்தில், விஷ்ணு நான்கு கைகளுடன், உடலின் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்ப்பாகம் மீனின் உருவாகவும் கொண்டவராகத் தோன்றினார் என்று மச்ச புராணம் கூறுகிறது.

    பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் முதன் முதலில் நீரில் தோன்றியது என்பதே டார்வினின் கண்டுபிடிப்பு.

    அப்படியே தான் திருமாலின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் உள்ளது.

    பிரளய காலத்தில் மச்ச அவதாரம் எடுத்து திருமால் உலகைக் காப்பாற்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன.

    ×