search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    முதல் அவதாரம் நடந்த புண்ணிய தலம்
    X

    முதல் அவதாரம் நடந்த புண்ணிய தலம்

    • ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.
    • இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    மகா விஷ்ணு ஒவ்வொரு யுகத்திலும் தசாவதாரம் எடுத்திருப்பதை புராணங்களில் படித்து இருப்பீர்கள்.

    ஒவ்வொரு அவதாரத்தின் பின்னணியிலும் ஒரு வரலாற்று நிகழ்வு அடங்கி இருக்கும்.

    அதை பிரதிபலிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற வைணவ தலங்கள் உள்ளன.

    அந்த வைணவ தலங்களில் மிகச் சிறப்பானவற்றை 108 திவ்ய தேசங்களாக நமது முன்னோர்கள் வகுத்து உள்ளனர்.

    இந்த திவ்ய தேசங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.

    அந்த வகையில் தசாவதாரம் நிகழ்ந்த இடங்களாக கருதப்படும் புண்ணிய தலங்கள் உயர்ந்த இறைஆற்றல் கொண்டவை.

    இதில் மகா விஷ்ணுவின் முதல் அவதாரம் நிகழ்ந்த இடம் நாகலாபுரம் ஆகும்.

    தமிழ்நாடு ஆந்திரா எல்லையில் ஊத்துக்கோட்டைக்கு மிக அருகில் நாகலாபுரம் உள்ளது.

    இந்த ஊரில் வேதவல்லி சமேத வேதநாராயண சாமி அருள் பாலித்து வருகிறார்.

    இந்த தலத்தில்தான் தசாவதாரத்தின் முதல் அவதாரமான மச்ச அவதாரம் நிகழ்ந்ததாக கருதப்படுகிறது.

    பெருமாள் மீன் வடிவமெடுத்து கடலுக்குள் சென்று வேதங்களை மீட்டு வந்ததன் பின்னணியில் இந்த அவதார கதை அமைந்துள்ளது.

    ஆனால் நாகலாபுரம் பகுதியில் கடல் எதுவும் கிடையாது. அங்கிருந்து பழவேற்காடு சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

    எனவே இந்த அவதாரம் நிகழ்ந்த போது நாகலாபுரம் பகுதி கடலாக இருந்திருக்கலாம் என்றும், நாளடைவில் கடல் பின்வாங்கியதால் ஊர்கள் தோன்றி இருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.

    நாகலாபுரத்தில் அமைந்துள்ள வேதநாராயண சுவாமி ஆலயம் முதல் அவதாரம் நிகழ்ந்த தலம் மட்டுமின்றி மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்டது.

    ஆகம அடிப்படையில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ஆலய அமைப்பு பக்தர்களுக்கு புதிய தகவல்களை சொல்லும் வகையில் அமைந்துள்ளது.

    சென்னையில் இருந்து இந்த ஆலயத்துக்கு மிக எளிதாக சென்று வரலாம்.

    இந்த ஆலயம் பற்றிய கூடுதல் தகவல்களை இந்த தொகுப்பில் காணலாம்.

    Next Story
    ×