search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் சமுதாய கூடம்"

    • கரூப்பூரில் ரூ..15 லட்சம் மதிப்பில் மகளிர் சமுதாய கூடம் கட்டும் பணி தொடங்கியது.
    • காதுகுத்து, மகளிர்குழு கூட்டங்கள், மகளிர்க்கான மருத்துவ முகாம் போன்றபயன்பாட்டிற்கான மகளிர் சமுதாயக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    திருக்காட்டுப்பள்ளி - கண்டியூர் சாலையில் உள்ள கருப்பூர் கிராமத்தில்கவ்டெசி தொண்டு நிறுவனம் மூலம் மகளிர் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டு விழா ஊராட்சி மன்ற தலைவர் மதுவிழி தலைமையில் நடைபெற்றது.

    கருப்பூர், கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலுடனும், கையுடன் கை தொண்டு நிறுவனத்தின் நிதி உதவியுடன் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் 1500 சதுர அடியில் பெண்கள்மேம்பாட்டிற்கான வளைகாப்பு, பூப்பு நீராட்டு விழா, காதுகுத்து, மகளிர்குழு கூட்டங்கள், மகளிர்க்கான மருத்துவ முகாம் போன்றபயன்பாட்டிற்கான மகளிர் சமுதாயக்கூடம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கியது .

    முன்னதாக கவ்டெசி தொண்டு நிறுவனத்தின் செயலாளர்கருணாமூர்த்தி அனைவரையும் வரவேற்றார். இந்த மகளிர் சமுதாயக்கூடம் அடிக்கல் நாட்டு விழாவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், மகளிர் கூட்டமைப்பு பொறுப்பாளர்கள், கவ்டெசி நிறுவன தலைவர் மாவடியான்மற்றும் நிர்வாக இயக்குனர்கல்பனா சங்கர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கவ்டெசி தொண்டு நிறுவன பணியாளர்கள் பாஸ்கர், ரூபன்,லில்லி ஆகியோர் செய்திருந்தனர். நிறைவாக அழகர் நன்றிகூறினார்.

    ×