search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் துணை சூப்பிரண்டு"

    • ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
    • ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா ரத்த தானம் செய்தார்.

    தஞ்சாவூர்:

    பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குநர் எழிலன் ஆலோசனையின் பேரில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் இன்று நடைபெற்றது.

    இந்த முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெற்றிவேல் தலைமையேற்று தொடக்கி வைத்தார்.

    இந்த நிகழ்வில் ஒரத்தநாடு போலீஸ் துணை சூப்பிரண்டு பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முதலாவது ஆளாக தானாக முன்வந்து ரத்த தானம் செய்தார்.

    இந்த முகாமில் தஞ்சை மாவட்ட யூத் ரெட் கிராஸ் அமைப்பாளரும் திருக்காட்டுப்பள்ளி அரசு கலைக் கல்லூரியின் உதவி பேராசிரியருமான முருகானந்தம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் வாசுகி, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் தஞ்சை மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் ஜெயக்குமார், திருச்சி விகாஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் வசந்த், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் மருத்துவர் வேல்முருகன், கல்லூரியின் யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் கற்பகம் மற்றும் கல்லூரியின் பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    இந்த முகாமில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 75 மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் ரத்ததானம் செய்தனர்.

    ×