search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் சீருடை பணியாளர்"

    • சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.
    • தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது.

    சேலம்:

    போலீஸ் சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் சேலம் மாவட்டத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டர்களை தேர்வு செய்ய ஏற்கனவே எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இதில் 311 பேர் தேர்வாகினர்.

    உடல் தகுதி தேர்வு

    தொடர்ந்து அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு நாளை (7-ந் தேதி), நாளை மறுநாள் (8-ந் தேதி) ஆகிய 2 நாட்கள் சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி அவர்களுக்கு அழைப்பு கடிதங்களும் அனுப்பப்பட்டுள்ளன.

    இந்த உடல் தகுதி தேர்வில் 2 நாட்களும் சேர்த்து மொத்தம் 311 பெண்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம், கயிறு ஏறுதல், வட்டு எறிதல் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    ஆலோசனை

    இந்த நிலையில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் ஆகியோர் சேலம் குமாரசாமிபட்டி ஆயுதப்படை மைதானத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் உடல் தகுதி தேர்வுக்கு வருபவர்களுக்கு செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் மற்றும் அவர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்தும் விரிவாக ஆலோசனை செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×