search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி இணையதளம்"

    • ‘சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய ‘ஆன்லைன்' மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
    • இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓ.டி.பி.யை பதிவு செய்ய கேட்கும்.

    சென்னை:

    தமிழ்நாடு 'சைபர் கிரைம்' பிரிவு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழக போலீஸ்துறையின் 'சைபர் கிரைம்' பிரிவு அவ்வப்போது பொதுமக்களுக்கு புதிய 'ஆன்லைன்' மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. தற்போது இணைய வழி மோசடி நபர்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் வாடிக்கையாளர்களை குறி வைத்து பண மோசடி செய்வதற்காக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) அனுப்புகின்றனர்.

    அந்த குறுஞ்செய்தியில், உங்கள் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. எனவே குறுஞ்செய்தியில் உள்ள 'லிங்க்'கை கிளிக் செய்து, உங்கள் பான் கார்டு எண்ணை பதிவு செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.

    இதனை உண்மை என்று நம்பி அந்த லிங்க்கை பொதுமக்கள் திறந்தவுடன், 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளம் தோன்றும். அதில் வாடிக்கையாளர் தங்களது வங்கி சேமிப்பு கணக்கு எண், வாடிக்கையாளர் அடையாள எண், செல்போன் எண், பிறந்த தேதி, பான் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை உள்ளீடு செய்ய கேட்கும்.

    அந்த தகவல்களை அந்த இணையதளத்தில் பதிவு செய்த பின்னர் ஓ.டி.பி.யை பதிவு செய்ய கேட்கும். அதில் ஓ.டி.பி. எண்ணை பதிவு செய்தவுடன் வாடிக்கையாளரின் 'இந்தியா போஸ்ட் பேமண்ட்' வங்கி கணக்கில் இருந்து மோசடி நபரின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டு வாடிக்கையாளர் ஏமாற்றப்படுகின்றனர்.

    எனவே அறிமுகம் இல்லாத நபர்களிடம் தொலைபேசி, குறுஞ்செய்தி, மின்னஞ்சல், பிஷிங் இணையதளம், வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் இதர சமூக ஊடகங்களை கையாளுதல்கள் மூலமாக வருகிற 'லிங்க்'குகளை தொடர்பு கொள்ள வேண்டாம். ஓ.டி.பி.யையும் பகிர வேண்டாம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தாராவின் மகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தை சுருட்டி விட்டனர்.
    • டாக்டர் தாரா போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் எப்படியாவது ஏமாற்றி விடுகிறார்கள்.

    சென்னையை சேர்ந்தவர் டாக்டர் தாரா. இவரது மகள் கனடாவில் வசிக்கிறார். அவருக்கு தாரா ஒரு கூரியர் பார்சல் அனுப்பி இருக்கிறார்.

    ஆனால் கூரியர் போய் சேராததால் அந்த நிறுவனத்துக்கு தாராவின் மகள் இலவச அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சற்று நேரத்தில் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது வாட்ஸ்அப்பில் விபரங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அவரும் அதை நம்பி விபரங்களை அனுப்பி உள்ளார். அதை தொடர்ந்து அவரது போனுக்கு சென்ற ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.

    அப்படியும் கூரியர் போகவில்லை. ஆனால் தாராவின் மகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தை சுருட்டி விட்டனர்.

    இதுபற்றி டாக்டர் தாரா போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

    போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.

    ×