search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fake Internet"

    • தாராவின் மகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தை சுருட்டி விட்டனர்.
    • டாக்டர் தாரா போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் ஏமாற்றுபவர்கள் எப்படியாவது ஏமாற்றி விடுகிறார்கள்.

    சென்னையை சேர்ந்தவர் டாக்டர் தாரா. இவரது மகள் கனடாவில் வசிக்கிறார். அவருக்கு தாரா ஒரு கூரியர் பார்சல் அனுப்பி இருக்கிறார்.

    ஆனால் கூரியர் போய் சேராததால் அந்த நிறுவனத்துக்கு தாராவின் மகள் இலவச அழைப்பு எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் யாரும் போனை எடுக்கவில்லை.

    இந்த நிலையில் சற்று நேரத்தில் தொலைபேசியில் ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார்.

    அப்போது வாட்ஸ்அப்பில் விபரங்களை அனுப்பும்படி கேட்டுள்ளார். அவரும் அதை நம்பி விபரங்களை அனுப்பி உள்ளார். அதை தொடர்ந்து அவரது போனுக்கு சென்ற ரகசிய குறியீட்டு எண்ணையும் தெரிவித்துள்ளார்.

    அப்படியும் கூரியர் போகவில்லை. ஆனால் தாராவின் மகளின் வங்கி கணக்கில் இருந்து ரூ.8 லட்சத்து 12 ஆயிரத்தை சுருட்டி விட்டனர்.

    இதுபற்றி டாக்டர் தாரா போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் தெரிவித்துள்ளார்.

    போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    அப்போது அந்த கும்பல் ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து செயல்படுவது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு சென்று 3 பேரை கைது செய்து பணத்தையும் மீட்டனர்.

    ×