search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் வலியுறுத்தி"

    • நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
    • உடல் நிலை பாதிக்கும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சு.பள்ளிப்பட்டு கிராமத்தில் உள்ள தர்மபுரி மேம்பாலத்தின் கீழ் குப்பையில் உணவு பொருட்களை மர்ம கும்பல் வீசி சென்றுள்ளனர். அதில்,

    குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பிஸ்கட்டுகள், கம்பெனி சிப்ஸ் வகைகள், டூத் பேஸ்ட், குளிர்பானங்கள் மற்றும் மளிகைப்பொ ருட்கள் ஏராளமான பாக்கெட்டுகள் கிடந்தன.

    இதையறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை எடுத்து செல்ல அருகே சென்று பார்த்தனர். அப்போது, அவை அனைத்தும் காலாவதியானது என்பது தெரியவந்தது. எனவே,' அவற்றை அங்கேயே விட்டுவிட்டு சென்றனர்.

    அவ்வழியாக செல்லும் குழந்தைகள் குப்பையில் வீசப்பட்டுள்ள அந்த உணவு பொருட்களை எடுத்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. இதன் காரண மாக அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே அவற்றை பார்வையிட்டு அப்புறப்படுத்த வேண்டும்.

    மேலும், காலாவதியான உணவு பொருட்களை குப்பையில் வீசி சென்ற மர்ம கும்பலை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்படுகிறது
    • பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் பேரூராட்சியில் நவீன வசதிகளுடன் கூடிய காரியமேடை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் காரிய மேடை அமைக்க கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன், தமது சொந்த செலவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6,66,700 வரைவோலையாக வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் செ.கணேஷிடம் வழங்கினார்.

    மேலும் கண்ணமங்கலம் பெருமாள் கோவில் தெருவில் ஊராட்சி ஒன்றிய இந்து ஆரம்பப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இங்கு சுற்றுச்சுவர் ரூ.2.66 மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்ட ரூ.66 ஆயிரம் மதிப்பில் டிடி யும் வழங்கப்பட்டது என பேரூராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி கோவர்த்தனன் தெரிவித்தார்.

    அப்போது உதவி செயற்பொறியாளர்கள் வேலூர் அம்சா, திருவண்ணாமலை செங்குட்டுவன், கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் முனுசாமி, இளநிலை பொறியாளர் ஷபிலால், துணை தலைவர் வி.குமார் அவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×