search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொட்டுக்கடலை பேடா"

    • ஒரு மாதம் வரை கூட கெட்டுப்போகாது.
    • பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.

    சின்ன வயசுல பக்கத்துல பெட்டி கடையில எல்லாம் கிடைக்கும் ஸ்வீட் தான் இது. பொட்டுக்கடலை கேக் ரெசிபி. ஒரு 10 நிமிடத்தில் இன்ஸ்டண்ட்டாக செய்து முடித்துவிடலாம். எப்படி செய்வது என்பதை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். உங்க வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களை வைத்து சுலபமாக இந்த ஸ்வீட் ரெசிபியை செய்யலாம். இந்த ஸ்பீட் செய்து காற்று புகாத ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் 1 மாதம் வரை கூட கெட்டுப்போகாது. சரி சரி அந்த சூப்பர் ரெசிபியை நேரத்தைக் கடத்தாமல் இப்போதே பார்க்கலாம் வாங்க.

    தேவையான பொருட்கள்

    பொட்டுக்கடலை- ஒரு கப்

    சர்க்கரை- ஒரு கப்

    ஏலக்காய் பொடி- ஒரு ஸ்பூன்

    நெய் – 1/4 கப்

    முந்திரி- அலங்கரிக்க மட்டும்

    செய்முறை

    முதலில் மிக்சி ஜாரில் பொட்டுக்கடலையையும் சர்க்கரையையும் ஏலக்காயையும் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

    அரைத்த இந்த மாவை இரண்டு முறை நன்றாக சலித்து எடுத்துக் கொள்ள வேண்டும். மாவு நறநறவென இருந்தால் ஸ்வீட் ரெசிபி நறநறப்பாக வந்துவிடும். பொட்டுக்கடலை எந்த கப்பில் அளக்கிறீர்களோ அதே கப்பில் சர்க்கரையையும் அளந்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் தேவைப்பட்டால் பால் பவுடர் கூட சேர்த்து செய்யலாம். சுவை கூடுதலாக இருக்கும்.

    அரைத்த சலித்த இந்த பொடியை ஒரு அகலமான பவுலில் போட்டு 1/4 கப் அளவு நெய்யை இதோடு சேர்த்து நன்றாக பிசைந்து கொண்டே இருக்க வேண்டும். ஐந்தில் இருந்து ஏழு நிமிடங்கள் அழுத்தம் கொடுத்து பிசைந்தால் போதும்.

    மாவு நன்றாக ஒட்டி பிடித்து பால்கோவா, குலோப் ஜாமுன் மாவு போல நமக்கு கிடைக்கும். அந்த மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் கேக் போல தட்டி உங்களுடைய வீட்டில் பால்பேடா அச்சு இருந்தால் அதில் இந்த பொட்டுக்கடலை மாவை வைத்து பேடா போல ஷேப்பில் மாற்றியும் செய்து கொள்ளலாம். அதன் நடுவே பாதாம் அல்லது பிஸ்தா பருப்பு வைத்து அலங்கரிக்கலாம்.

    சிறிய சிறிய அளவு மூடியில் இந்த மாவை வட்ட வடிவத்தில் வெட்டி, கத்தியை வைத்து நான்கு கோடு போட்டு கூட குழந்தைகளுக்கு அழகாக கொடுக்கலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

    ×