search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைப்"

    • போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை நிறுத்தி பைப்புகளை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    மதுரை

    மதுரை திடீர் நகர் போலீஸ் குடியிருப்பில் இரும்பு பைப்புகள் பாதுகாக்கப்பட்டு வந்தன. மர்ம நபர்கள் 30 இரும்பு பைப்புகளையும் திருடி சென்று விட்டனர். இது குறித்து கான்டிராக்டர் பாண்டி, திடீர் நகர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் லோகேசுவரி வழக்குப் பதிவு செய்தார். போலீசார் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.அப்போது போலீஸ் குடியி ருப்புக்குள் லாரியில் இரும்பு பைப்புகளை எடுத்து செல்வது தெரிய வந்தது.

    அந்த லாரியின் பதிவெண் பற்றிய விவரம் தெரிய வந்தது. அதன்பேரில் போலீசார் அவனியாபுரம் எம்.எம்.சி காலனியில் பதுங்கி இருந்த வாலிரை பிடித்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ரூ.90 ஆயிரம் மதிப்புள்ள 30 இரும்பு பைப்புகள் பதுக்கியிருந்தது தெரிய வந்தது.

    இரும்பு பைப்புகளுடன் லாரியையும் பறிமுதல் செய்த போலீசார், பிடி பட்ட வாலிபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அவர் ஆந்திர மாநிலம், குண்டூர், சிரங்கி பாலத்தை சேர்ந்த தும்மா மார் ரெட்டி (28) என்பது தெரியவந்தது. இவர் வேலை பார்க்கும் நிறுவனம், மதுரையில் புதைவட கம்பிகள் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    அந்த நிறுவனத்துக்கு இரும்பு பைப்புகள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை சரி கட்டுவதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனாலும் இரும்பு பைப்புகள் கிடைக்க வில்லை. மதுரையில் பல்வேறு பகுதிகளில் தனியார் நிறுவனங்கள், புதைவட கம்பிகள் பதிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றில் ஏதேனும் ஒரு கம்பெனியில் உள்ள இரும்பு பைப்புகளை திருடுவது என்று அந்த வாலிபர் முடிவு செய்தார். அவர் லாரியை எடுத்துக் கொண்டு திடீர்நகர் போலீஸ் குடியிருப்புக்குள் லாரியை கொண்டு வந்து பைப்புகளை நைசாக திருடி சென்றது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×