search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பைக் விபத்து"

    • படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டனர்
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

    ஆற்காடு:

    வேலூர் முள்ளிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோகுல் நாத் (வயது 18). இவர் ஆற்காடு அருகே உள்ள தாஜ் புரா பகுதியில் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வந்துள்ளார். இவரது நண்பர் வேலூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த சுதாகர்.

    இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு ஆற்காட்டில் இருந்து வேலூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    ஆற்காடு அருகே உள்ள கரடிமலை பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி சாலையின் ஓரம் இருந்தமைல் கல் மீது மோதியுள்ளது. இதில் தூக்கி வீசப்பட்ட கோகுல்நாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த சுதாகரை அங்கிருந்தவர்கள் மீட்டு 'வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் திமிரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலையில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து இறந்தார்
    • திருவிழாவுக்கு சொந்த ஊருக்கு வந்திருந்தார்

    ஆரணி:

    ஆரணி அடுத்த குடிசை கிராமத்தைச் சேர்ந்தவர் தயாநிதி. இவர் சென்னையில் சினிமாவில் லைட் மேனாக பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு சரண்யா என்ற மனைவியும் சரண்ராஜ் என்ற மகனும் உள்ளனர். திருவிழாவிற்காக தனது கிராமத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்தார்.

    இந்த நிலையில் நேற்று ஆரணிக்கு சென்று காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது விண்ண மங்கலம் கூட்ரோடு அருகே வரும்போது முன்னால் சென்ற மினி ஆட்டோ சாலையில் வலது பக்கமாக திரும்பியது.

    பின்னால் தயாநிதி ஒட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக மினி ஆட்டோ மீது மோதியது. இதில் அவர் தவறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து இறந்தார்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி தாலுகா போலீசார் தயாநிதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சரண்யா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சைக்கிளில் சென்றபோது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த முள்ளிப் பட்டு கிராமத்தைச் சேர்ந்த வர் சேது ரத்தினம் (வயது 77). இவர் கடந்த 20-ந் தேதி சைக் கிளில் ஆரணி பஜாருக்கு வந்து கொண்டிருந்தார்.

    காந்தி ரோட்டில் உள்ள தியேட்டர் அருகாமையில் வந்தபோது பின்னால் பைக்கில் வந்த நபர் சேதுரத்தினம் ஓட்டி சென்ற சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதினார்.

    பின்னர் அங்கிருந்து அந்த நபர் வேகமாக பைக்கில் சென்று விட்டார்.

    இதில் படுகாயம் அடைந்த சேதுரத்தினத்தை அந்த வழியாக சென்றார்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதுகுறித்து அவரது மகன் அருணாசலம், ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்த சேதுரத்தினத்திற்கு காந்திமதி என்ற மனைவியும், 3 மகள்கள் ஒரு மகனும் உள்ளனர்.

    • வேலைக்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    ராணிப்பேட்டை:

    அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரஜினி (வயது 42). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

    இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர் நேற்று வீட்டிலிருந்து மொபட்டில் வேலைக்கு புறப்பட்டார். பெல் பைபாஸ் மலைமேடு ரெயில்வே பாலம் அருகில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த லாரி மொப்ட் மீது மோதி யது.

    இதில் படுகாயம் அடைந்த ரஜினியை சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வந்தனர்.

    ஆனால் வழியிலேயே ரஜினி பரிதாபமாக இறந்து விட்டார். இது குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×