search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் செயின் பறிப்பு"

    வடுவூர் அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 6½ பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள புன்னவராயன் குடி காட்டை சேர்ந்தவர் தாமரைச்செல்வன். இவரது மனைவி கவிதா (வயது 45). தாமரைசெல்வனும், கவிதாவும் மோட்டார் சைக்கிளில் மன்னார்குடிக்கு சென்றனர்.

    அவர்கள் திருமங்கலம் என்ற இடத்தில் சென்றபோது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் திடீரென கவிதா அணிந்திருந்த 6½ பவுன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த கவிதா காயமடைந்தார். இதுபற்றி கவிதா வடுவூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பறித்த 2 பேரையும் தேடி வருகிறார்.

    இந்த சம்பவம் வடுவூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கரூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் முகமூடி கொள்ளையர்கள் கழுத்தில் கடந்த செயினை பறித்து சென்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே முச்சகொட்டாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், அதே பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி நதியா (வயது 24). நேற்று இரவு தங்கராஜ் வெளியே சென்று விட்டார். இதனால் நதியா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

    அப்போது ஒரு பைக் தங்கராஜ் வீட்டின் முன்பு வந்து நின்றுள்ளது. அதில் இருந்து முகமூடி அணிந்த 3 பேர் வீட்டிற்குள் அடாவடியாக புகுந்துள்ளனர். மேலும் சத்தம் போட்டால் கழுத்தை அறுத்துவிடுவோம் என நதியாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியுள்னர். இதனால் நதியா அதிர்ச்சியில் உறைந்தார். அதனை தொடர்ந்து மர்ம நபர்கள் வீட்டில்  உள்ள தங்கம், பணம் போன்றவற்றை தேடியுள்ளனர். பின்னர் நதியாவின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் செயினை பறித்துள்ளர். கண்ணிமைக்கும் நேரத்தில் முகமூடி திருடர்கள் 3 பேரும் பைக்கில் தப்பி சென்றனர்.

    இது குறித்து கரூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். கொள்ளை சம்பவம் நடந்த நேரத்தில் தங்கராஜ் வீட்டில் இல்லை. இதனால் கொள்ளையர்கள் திட்டமிட்டு இந்த செயலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
    ×