search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்ணிடம் செயின் பறிப்பு"

    ஈத்தாமொழி அருகே நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் 5½ பவுன் செயினை பறித்து சென்றனர்.

    ராஜாக்கமங்கலம்:

    ஈத்தாமொழியை அடுத்த வடக்குசூரங்குடி பகுதியைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி செல்வி கதிரேசன் (வயது42).

    நேற்று மாலை செல்வி கதிரேசன் வீட்டின் அருகில் உள்ள உறவினர் ஒருவரின் திருமண விழாவிற்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார். வத்தக்கா விளை அருகே வந்த போது அவருக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

    அவர்கள் செல்வி கதிரேசன் அருகே வந்த போது அவரிடம் பேச்சு கொடுத்தனர். அப்போது மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்த வாலிபர் செல்வி கதிரேசனின் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன், திருடன் என கூச்சலிட்டு அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

    பொதுமக்கள் வருவதை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களும் அவரது கையை தட்டி விட்டு கழுத்தில் கிடந்த 5½ பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதுகுறித்து ஈத்தாமொழி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் ஞானரூபி பரிமளா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். செல்விக் கூறிய அடையாளங்களை வைத்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு காமிராக்கள் ஏதாவது உள்ளதா? எனவும் ஆய்வு செய்து வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் கருங்கல் உதய மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது மனைவி தங்கலீலா (வயது57). இவர் சம்பவத்தன்று வீட்டில் இருந்து தேவிக்கோடு பகுதியில் உள்ள ஒரு ஆலயத்திற்கு சென்றார்.

    பின்னர் அங்கிருந்து அவர் நடந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். தானிவிளை அருகே வரும் போது அவருக்கு எதிரே ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்தனர். அவர்கள் தங்கலீலா அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் இருந்த வாலிபர்கள் அவரது கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்கசெயினை பறிக்க முயன்றனர்.

    இதில் சுதாரித்துக் கொண்ட அவர் செயினை பிடித்துக் கொண்டு கூச்சலிட்டு அலறினார். இதனால் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் செயினை பறிக்காமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜனார்த்தனன் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    நாகமலை புதுக்கோட்டையில் மோட்டார் சைக்கிளில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 7 பவுன் நகையை பறித்து வழிப் பறி ஆசாமிகள் தப்பி விட்டனர்.
    மதுரை:

    மதுரை செக்கானூரணியைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 40). இவரது மனைவி சுதா. 2 பேரும் மோட்டார் சைக்கிளில் நாகமலை புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சுதா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.1.40 லட்சம் ஆகும்.

    இது குறித்து ஜெயபிரகாஷ் நாகமலை புதுக்கோட்டை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    தாரமங்கலம் அருகே பெண்ணிடம் 5 பவுன் தங்க செயினை மோட்டார் சைக்கிளில் வந்த ஹெல்மெட் கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் புதுசாம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (54). இவர் புதுசாம்பள்ளியில் உள்ள வீட்டு வசதி வாரியத்தில் செயலாளராக உள்ளார். இவரும், இவரது மனைவி உஷா (48) என்பவரும் சம்பவத்தன்று சேலம் சென்று விட்டு பின்னர்  மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.

    தாரமங்கலம் அருகே பவளத்தானூர் பெட்ரோல் பங்க் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது பின்னால் ஹெல்மெட் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 2 கொள்ளையர்கள் திடீரென உஷா கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க நகையை பறித்து விட்டு சென்று விட்டனர்.

    இது குறித்து ஹரிகரன் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரின் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சக்கரபணி, சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    டீக்கடையில் இருந்த பெண்ணிடம் பட்டப்பகலில் 7 பவுன் செயினை பறித்துச்சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரை சிலைமான் அருகில் உள்ள புளியங்குளம் எல்.கே.டி. நகரைச் சேர்ந்த அய்யப்பன் மனைவி தனலட்சுமி (வயது54). இவர் மதுரை-ராமநாதபுரம் ரோட்டில் தனியார் மில் அருகே டீக்கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்த நிலையில 2 இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தனர். அவர்கள் தனலட்சுமியிடம் டீ வாங்கி குடித்து விட்டு காசு கொடுத்தனர்.

    இதையடுத்து தனலட்சுமி கல்லாவில் சில்லரை எடுப்பதற்காக திரும்பினார். அப்போது மர்ம வாலிபர்கள் தனலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

    இதுதொடர்பாக தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் பெண் ஒருவரிடம் வழிப்பறி கொள்ளையர்கள் 7 பவுன் செயினை பறித்து சென்ற சம்பவம் சிலைமான் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தாதகாப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மனைவி சுமலதா (வயது 31). இவருடைய பெற்றோர் வீடு அதே பகுதியில் உள்ளது. இதனால் நேற்று சுமலதா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். பின்னர் மாலை 4 மணி அளவில் தனது வீட்டிற்கு திரும்பினார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்தனர். அவர்கள் 2 பேரும் சேர்ந்து சுமலதாவை வழிமறித்து அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்தனர். மேலும் அவரிடம் இருந்த ரூ.1000 மதிப்புடைய செல்போன், ரூ.150 ஆகியவற்றையும் பறித்தனர்.

    இந்த வழிப்பறி சம்பவத்தால் சுமலதா அதிர்ச்சி அடைந்தார். அவர், ‘‘திருடர்கள்... திருடர்கள்.. யாராவது வந்து அவர்களை பிடியுங்கள்’’ என சத்தம் போட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 வாலிபர்களையும் துரத்திச் சென்று சுற்றி வளைத்தனர். உடனே அந்த வாலிபர்கள் கத்தியை எடுத்துக்காட்டி யாராவது பக்கத்தில் வந்தால் குத்திக்கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர். தனக்கு நேர்ந்த இந்த சம்பவம் குறித்து சுமலதா கண்ணீர் மல்க அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சுமலதாவிடம் நகை மற்றும் பணத்தை பறித்தவர்கள் சேலம் குகை, பஞ்சந்தாங்கி ஏரியை சேர்ந்த கார்த்திக் (21) மற்றும் தாதகாப்பட்டி, சண்முகாநகரை சேர்ந்த பிரகாஷ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து நேற்று இரவு போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து செல்போனையும், பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

    ஆனால், குற்றச் செயலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மற்றும் வழிப்பறி செய்த நகை ஆகியவற்றை என்ன செய்தார்கள்? என்பது பற்றி 2 பேரும் சொல்லவில்லை. இவர்கள் மீது 3-க்கும் மேற்பட்ட வழக்குகள் சேலம் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருக்கின்றன. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சங்கரன்கோவிலில் மளிகை கடை நடத்தி வந்த பெண்ணிடம் 4 பவுன் செயினை வாலிபர் பறித்து சென்றார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் சாந்திநகரை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி செல்வம் (வயது 36). இவர்கள் கழுகுமலை சாலையில் ஒரு மளிகை கடை நடத்தி வருகின்றனர். நேற்று கடையில் செல்வம் இருந்துள்ளார். அப்போது கடைக்கு 24 மதிப்புள்ள வாலிபர் வந்து பொருட்கள் கேட்டுள்ளார். அதனை செல்வம் எடுப்பதற்காக திரும்பியுள்ளார்.  அப்போது  திடீரென அந்த வாலிபர் செல்வம் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார். 

    இது குறித்து செல்வம் சங்கரன்கோவில் டவுண் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற கொள்ளையனை தேடி வருகின்றனர்.
    வேலூர் அருகே கோலம் போட்டுக்கொண்டிருந்த பெண்ணிடம் முகமூடி அணிந்து வந்த வாலிபர் செயின் பறித்து சென்ற சம்பவம் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள பெருமுகை தனியார் என்ஜினியரிங் கல்லூரி சாலை பகுதியில் வசிப்பவர் ராமமூர்த்தி. இவரது மனைவி சரஸ்வதி (50). இவரது வீட்டின் முன்பு கோலம் போட்டுக்கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட மாம் நபர்கள் முகமூடி அணிந்து பைக்கில் வந்தனர். அவர்கள் சரஸ்வதி கழுத்தில் அணிந்திருந்த 10 1/2 பவுன் தங்க செயினை பறித்து சென்று விட்டனர். இதனால் திடுக்கிட்ட சரஸ்வதி கூச்சலிட்டார். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி சென்று விட்டனர்.

    இதுபற்றிய புகாரின் பேரில் சத்துவாச்சாரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோலம் போட்ட பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வேலூரில் தெருவில் நடந்து சென்ற பெண்ணிடம் மர்மநபர்கள் 5 பவுன் தங்க செயினை பறித்து சென்றுவிட்டனர்.

    வேலூர்:

    வேலூர் தியாகராஜ புரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது 35). நேற்று இரவு இவரது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஆள்நடமாட்டம் இல்லாததை அறிந்த வாலிபர்கள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து வந்தனர். அவர்கள் ராஜலட்சுமி அணிந்திருந்த 5 பவுன் தங்க செயினை பறித்தனர்.

    இதனால் திடுக்கிட்ட ராஜலட்சுமி கூச்சலிட்டார் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் பைக்கில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து வேலூர் தெற்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி பெண்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் குலசை கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் 4 1/2 பவுன் தாலி செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் அருகே உள்ள பேயன்விளையை சேர்ந்தவர் சுடலை. இவர் தனது மனைவி பஞ்சவர்ணம் மற்றும் குழந்தைகளுடன் நேற்று மாலை குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு செல்வதற்காக திருச்செந்தூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறினார். அப்போது அங்கு ஏராளமான கூட்டம் இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் பஞ்சவர்ணம் கழுத்தில் கிடந்த 41/2 பவுன் தாலி செயின் பறித்து சென்று விட்டனர். 

    பஸ் ஏறிய பின்னர் தனது நகை பறிபோனதை உணர்ந்து அதிர்ச்சியடைந்த பஞ்சவர்ணம் திருச்செந்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
    ஹெல்மெட் அணிந்து வந்து பெண்ணிடம் 5 பவுன் செயினை பறித்துச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ஆற்காடு தோப்புக்கானா மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சோழன். இவரது மனைவி சாந்தி (வயது 55). இவர், மளிகை பொருட்கள் வாங்க வீட்டின் எதிரே உள்ள மளிகை கடைக்கு சென்றார். அப்போது, ஹெல்மெட் அணிந்து பைக்கில் வந்த ஒரு வாலிபர், சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றான்.

    இதுப்பற்றி ஆற்காடு டவுன் போலீசில் சாந்தி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து செயின் பறித்த கொள்ளையனை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ஆற்காடு, ராணிப்பேட்டை பகுதியில் செயின் பறிப்பு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெண்கள் பாதுகாப்புடன் வீதியில் நடக்க முடியவில்லை. கொள்ளையர்களை பிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    திருவட்டார் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 2½ பவுன் செயினை பறித்து சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நாகர்கோவில்:

    குலசேகரம் பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவரது மனைவி வசந்தகுமாரி (வயது 54). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திருவட்டார் இட்டகவேலி வந்தார். பின்னர் அங்கிருந்து அப்பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் ஒரே மோட்டார் சைக்கிளில் 3 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் வசந்த குமாரி அருகில் வந்தபோது மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்த வாலிபர் அவர் கழுத்தில் கிடந்த செயினை பறித்தார். இதில் சுதாரித்துக் கொண்ட வசந்தகுமாரி செயினை இறுக்கமாக பிடித்துக் கொண்டு திருடன் திருடன் கூச்சலிட்டு அலறினார்.

    ஆனாலும் மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையர்கள் அவரது கையை தட்டிவிட்டு கழுத்தில் கிடந்த 2½ பவுன் செயினை பறித்துக் கொண்டு பின்னல் வேகத்தில் மறைந்தனர்.

    இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சத்தியசோபன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
    சேலத்தில் ஆட்டோவில் சென்ற பெண்ணிடம் 5 பவுன் நகையை பக்கத்தில் இருந்த நபர் பறித்து சென்றார்.
    கொண்டலாம்பட்டி:

    சேலம், பொன்னம்மாப்பேட்டை, கோபால் செட்டிதெருவை சேர்ந்தவர் வீரன். இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 72). இவர், நேற்று முன்தினம் சேலம் டவுன் ஆனந்தா இறக்கம் பகுதியில் சேலம் நோக்கி ஷேர் ஆட்டோவில் சென்றார். பின்னர் ஆட்டோவில் இருந்து இறங்கி கண்ணம்மாள் வீட்டிற்கு சென்றார். அப்போது கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை காணவில்லை. 

    ஆட்டோவில் வந்த போது பக்கத்தில் இருந்த நபர் நகையை திருடியது தெரியவந்தது. இது குறித்து டவுன் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி விசாரணை நடத்தி வருகிறார்.
    ×