search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூஸ்டர்"

    • கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது.
    • விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.

    உலக பணக்காரரான எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், செவ்வாய் கிரகம் மற்றும் நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வதற்காக ஸ்டார்ஷிப் விண்கலத்தை உருவாக்கிது. அந்த நிறுவனம் இதுவரை உருாக்கியதிலேயே மிகப் பெரிய ராக்கெட் இதுவாகும்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஸ்டார்ஷிப் விண்கலம் சோதனை முயற்சியாக விண்ணில் ஏவப்பட்டது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. ஏவப்பட்ட நான்கு நிமிடங்க ளில் ஸ்டார்ஷிப் வெடித்து சிதறியது.

    இந்நிலையில் ஸ்டார் ஷிப்பின் சோதனை 2-வது முறையாக நேற்று நடந்தது. டெக்சாசில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

    சுமார் 400 அடி உயரம் கொண்ட விண்கலத்தில் சூப்பர் ஹெவி எனப்படும் முதல் பகுதியில் பூஸ்டர் இருந்தது. மற்றொரு பகுதியில் 165 அடி உயர ஸ்டார் ஷிப் விண்கலம் பொருத்தப்பட்டது.

    ஏவப்பட்ட சிறிது நேரத்தில் பூஸ்டர் வெற்றிகரமாக ஸ்டார் ஷிப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. பூஸ்டரை தரையிறக்க முயற்சி மேற் கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்டார்ஷிப்பில் இருந்து பிரிந்த பூஸ்டர் வெடித்து சிதறியது.

    இது தொடர்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கூறும்போது, விண்கலம் ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்கு பிறகு தொடர்பு துண்டிக்கப்பட்டது. 2-வது கட்டத்தில் நாங்கள் தரவை இழந்தோம்.

    எங்கள் ஸ்டார்ஷிப் விண்கலம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு சோதனை மூலம் நாம் கற்றுக் கொள்வதில் இருந்து வெற்றி வருகிறது. இன்றைய சோதனை ஸ்டார்ஷிப்பின் நம்பகத் தன்மையை மேம்படுத்த உதவும்.

    இந்த ராக்கெட் ஏவுதல் ஸ்பேஸ் எக்ஸ் என்ஜினீயர்களால் நம்ப முடியாத அளவுக்கு வெற்றிகரமாக இருந்தது என்று தெரிவித்தது.

    • தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.
    • கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவை விற்று வரும் ராணாவின் செயல் பலரின் பாராட்டுகளைப் பெற்றது.

    புதுடெல்லி:

    பஞ்சாப் மற்றும் அரியானாவின் தலைநகரான சண்டிகரைச் சேர்ந்தவர் ராணா. உணவுக்கடையை நடத்தி வரும் இவர் கடந்த 15 ஆண்டாக சைக்கிளில் உணவை விற்று வியாபாரம் செய்து வருகிறார்.

    கொரோனா பெருந்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டபோது தடுப்பூசி செலுத்த அரசு முடிவு எடுத்தது. பலர் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டினர். அப்போது, யாரெல்லாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தைக் கொடுக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என ராணா அறிவித்தார்.

    ராணாவின் மகள் ரிதிமா அவருக்கு இந்த யோசனையை தெரிவித்தார். இதையடுத்து, பலர் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வந்தனர். அவர்களுக்கு தான் விற்று வரும் உணவான பூரி மசாலை இலவசமாக வழங்கி வந்தார்.

    இந்நிலையில், ஒவ்வொரு மாதமும் வானொலி வாயிலாக மக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பாராட்டினார்.

    தற்போது பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது. இதையடுத்து ராணா மீண்டும் தனது பழைய யோசனையை செயல்படுத்த தொடங்கி உள்ளார்.

    அதன்படி யாரெல்லாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அதற்கான ஆதாரத்தைக் காண்பிக்கின்றனரோ அவர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். கொளுத்தும் வெயிலில் சைக்கிளில் உணவை விற்று வரும் ராணாவின் செயல் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

    பிரதமர் மோடி தன்னைக் குறிப்பிட்டு மன் கி பாத் நிகழ்ச்சியில் பாராட்டியது தனக்கு பெருமையான விஷயமாக அமைந்தது என்று கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தனியார் நிறுவனங்கள் ஜாமர், பூஸ்டர் கருவிகளை கொள்முதல் செய்ய முடியாது.
    • இது குறித்து விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி சட்டவிரோதம்.

    மத்திய தொலைத் தொடர்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிக்கையில், மத்திய அரசின் அனுமதியில்லாமல், செல்போன் தகவல் தொடர்புகளை செயலிழக்கச் செய்யும் ஜாமர் கருவிகள், ஜிபிஎஸ் பிளாக்கர் மற்றும் இதர செயலிழப்பு செய்யக்கூடிய கருவிகளை தனியார் பயன்படுத்துவது சட்ட விரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

    இந்தியாவில் தகவல் தொடர்பை செயலிழக்கச்செய்யும் கருவிகளை தனியார் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் கொள்முதல் செய்யமுடியாது. இதுகுறித்து விளம்பரம் செய்வது, விற்பனை, விநியோகம் மற்றும் இறக்குமதி செய்வதும் சட்டவிரோதம் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

    சமிக்ஞை பூஸ்டர்களைப் பொருத்தவரை, உரிமம் பெறப்பட்ட தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களைத் தவிர இதர நிறுவனங்களோ அல்லது தனிநபரோ செல்பேசி சமிக்ஞை பூஸ்டர்களை வாங்குவதும், விற்பதும் சட்டவிரோதமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கம்பியில்லா ஜாமர்களை தங்களது இணையவழி தளத்தில் விற்பனை செய்யக்கூடாது என்று அனைத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    ×