search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருது"

    • அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
    • மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் கலந்து கொண்டனர்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

    அவ்வகையில் 2022 மற்றும் 2023ம் ஆண்டுகளுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    செவிலியர் பணியில் அர்ப்பணிப்பு, கடமை மற்றும் சமூக சேவைக்காக 30 செவிலியர்களுக்கு இந்த மதிப்புமிக்க விருது வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா, இணை மந்திரி எஸ்.பி.பாகெல் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    • புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதானது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்
    • ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    புதுடெல்லி:

    நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாகப் பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு வழங்கி வருகிறது. இது செவிலியர்களுக்கான மிக உயரிய விருது ஆகும்.

    அவ்வகையில் 2021ம் ஆண்டுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள் இன்று வழங்கப்பட்டன. விருது வழங்கும் விழா ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. தேர்வு செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    ×