search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புறக்கணிப்பு"

    • சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
    • மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர்

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை முன்னிட்டு அரசூர் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கூட்டத்தில் அரசூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் அனிதா, ஊராட்சி செயலர் மூவேந்தன், ஒன்றிய பணி மேற்பார்வையாளர் மாலா மற்றும் அதிகாரிகள் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் கிராமத்திற்குத் தேவையான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது.

    அப்போது கிராம பொதுமக்கள் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி இடிக்கப்பட்டு கட்டப்படாமல் உள்ளதால் இப்பகுதி மக்கள் கடந்த ஒரு வருட காலமாக குடிநீருக்காக சிரமப்பட்டு வருகின்றனர். கட்சி பிரமுகர் ஒருவரின் தூண்டுதல் காரணமாக சட்டமன்ற உறுப்பினர் அதிகாரியிடம் பேசியதால் இந்த மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்படாமல் உள்ளது எனக்கூறி கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் செய்தனர். திருவெண்ணைநல்லூர் போலீசார் சமாதானம் செய்தனர். தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முபாரக் அலிபேக், தேவராஜன், உதவி செயற்பொறியாளர் நித்யாமற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு அதே இடத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். சுதந்திர தின விழா கிராமசபை கூட்டத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்ததால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத மக்களை மாநகராட்சி புறக்கணித்துள்ளது
    • அனைவரும் கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்பல்

    திருச்சி:

    திருச்சி மாநகராட்சி பகுதியில் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகர் உள்ளது. இங்கு 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த தெரு பகுதி மாநகராட்சியின் பழைய 35-வது வார்டில் இருந்தது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வார்டு மறு மறு வரையறை செய்யப்பட்டபோது புதிய 47-வது வார்டுடன் சேர்க்கப்பட்டது.

    இந்த மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் 2019 ஆம் ஆண்டுகளில் 5 குடியிருப்புகள் மட்டுமே இருந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட வீடுகள் இந்த பகுதியில் புதிதாக கட்டப்பட்டது. ஆனால் தற்போது இந்த குடியிருப்பு வாசிகள் சாலை, தெரு விளக்கு, பாதாள சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கப் பெறாமல் புறக்கணிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது 47-வது வார்டு வாக்காளர் பட்டியலில் மேற்கண்ட குடியிருப்பு வாசிகள் இடம்பெறவில்லை. வெளியூர்களில் வாக்குகள் இருந்தவர்கள் வெளியூருக்கு சென்று வாக்களித்தனர். மாநகராட்சியின் இதர பகுதிகளில் வாக்குகள் இருந்த குடியிருப்பு வாசிகள் அங்கு சென்று வாக்களித்தனர்.

    இதன் காரணமாக அனைத்து தரப்பினரும் தங்களை கைவிட்டு விட்டதாக குடியிருப்பு வாசிகள் புலம்புகிறார்கள். மேற்கண்ட பகுதியில் குடியிருக்கும் ஒருவர் நம்மிடம் கூறும் போது, நாங்கள் வீடுகளுக்கு வீட்டு வரி செலுத்தி வருகிறோம். அந்த ரசீதில் பழைய 35-வது வார்டு என இடம்பெற்றுள்ளது. தற்போது 47-வது வார்டில் எங்கள் பகுதி இணைக்கப்பட்டுள்ளது.

    ஆனால் குடிநீர் இணைப்பு கேட்டால் உங்கள் தெரு 47-வது வார்டில் இணைக்கப்படவில்லை என சொல்கிறார்கள். அதே போன்று பழைய 35-வது வார்டில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அரசின் உதவிகளுக்காக பிங்க் நம்பர் வழங்கப்படுகிறது. ஆனால் மொராய்ஸ் கார்டன் ரன்வே நகரில் உள்ள கர்ப்பிணி பெண்கள் சென்றால் ஏர்போர்ட் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைக்கிறார்கள்.

    அங்கு சென்றால் அவர்களும் நம்பர் வழங்காமல் வேறு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறார்கள். எங்கள் தெருவில் பக்கத்து தெரு வரை பாதாள சாக்கடை திட்ட பணிகள் வந்துவிட்டது. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளது. எங்களுக்கு மட்டும் இதுவரை அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகிறது.

    தற்போது நாங்கள் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கின்றோம். எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் தலையிட்டு தெரு விளக்கு, சாலை, பாதாள சாக்கடை குடிநீர் இணைப்பு போன்ற அடிப்படை வசதிகளை ரன்வே நகர் மக்களுக்கும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    உள்ளாட்சி தேர்தலின் போது குடியிருக்கும் பகுதியில் வாக்களிக்க ஆர்வம் காட்டாத காரணத்தினால் அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    ×