search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித செபஸ்தியார் ஆலயம்"

    • காரைக்கால் புனித செபஸ்தியார் ஆலய தேர்ப்பவனி நடந்தது.
    • தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது.

    புதுச்சேரி

    காரைக்கால் திருநள்ளாறு சாலை தருமபுரம் அருகே, பழைமை வாய்ந்த புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. தருமபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நிலவிய வறட்சி மற்றும் காலரா நோய் பாதிப்பு நீங்க வேண்டி, ஆண்டுதோறும் தை மாத அறுவடையின்போது தேர் பவனி நடத்துவதாக பக்தர்கள் வேண்டிக் கொண்டதாகவும், அதன்படி பாதிப்பு நீங்கியதால், புனித செபஸ்தியாரை மகிழ்விக்கும் வகையில், ஆண்டுதோறும் இந்த தேர் பவனி நடத்தப்படுகிறது.

    அறுவடை தொடங்கவுள்ள நிலையில், செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி நடைபெற்றது. முன்னதாக, பக்தர்கள் முன்னிலையில் புனித செபஸ்தியாருக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பிரதான தேரில் புனித செபஸ்தியாரும், மைக்கேல் அந்தோணியார், சம்மனசு சொரூபத்துடன் தேர் பவனி நடைபெற்றது. தருமபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் வலம் வந்த தேர் நள்ளிரவில் மீண்டும் ஆலயத்தை சென்றடைந்தது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்று செபஸ்தியாரை வழிபட்டனர்.

    • ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.
    • கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்ச்சி நேற்று நடந்தது. கொடியேற்ற நிகழ்ச்சிக்கு மதுரை உயர் மறை மாவட்டம் பேராயர் அந்தோணி பாப்புசாமி தலைமை தாங்கினார். முட்டைக்காடு பங்குதந்தை மனோகியம் சேவியர், ஆலன்விளை பங்குதந்தை பிரைட் சிம்ராஜ், மாடத்தட்டுவிளை பங்குத்தந்தை ஜெயக்குமார், இணை பங்குதந்தை செல்வக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சியில் பங்குஅருட்பணி பேரவை துணை தலைவர் எட்வின் சேவியர் செல்வின், செயலாளர் ராணி ஸ்டெல்லா பாய், துணை செயலாளர் ஜோஸ் வால்டின், பொருளாளர் லூக்காஸ் உள்பட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.

    ×