search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "St. Sebastian's Church"

    • வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங் கியது. 10 நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
    • கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் புண்ணிய திருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் அருகே உள்ள முத்துலாபுரம் புனித செபஸ்தியார் ஆலயத்திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங் கியது. 10 நாட்கள் திருவிழா சிறப்பாக கொண்டா டப்படுகிறது.

    கொடியேற்றம்

    கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் புண்ணிய திருத்தலங்களில் முத்துலாபுரம் புனித செபஸ்தியார் திருத்தலமும் ஒன்றாகும். கத்தோலிக்க கிறிஸ்த வர்களின் சைவத்தி ருத்தலம் என அழைக்கப்படும் இத்திருத்தலத்திருவிழா தொடக்கமாக நேற்று மாலை 6.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    பாளைமறைமாவட்டம் அந்தோணி குரூஸ், தூத்துக்குடி ஆயர் இல்லம் நார்பர்ட் தாமஸ், ரஜகிருஷ்ணாபுரம் பங்கு தந்தை ஜோசப்கிறிஸ்டியன், பத்திநாதபுரம் பங்குத்தந்தை சேகரன் குரூஸ் ஜெபம் அர்ச்சித்து செய்து கொடியேற்றினார்.

    அதனைத் தொடர்ந்து சிறப்பு மாலை ஆராதனை மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீர்வாதம் நடைபெற்றது. திருவிழா நாட்களில் தினமும் காலை திருப்பலியும் இரவு மறையுரை மற்றும் நற்கருணை ஆசீர்வாதமும் நடைபெறுகிறது.

    தேர்ப்பவனி

    வருகிற 4-ந் தேதி 7-ம் திருவிழா இரவு 9 மணிக்கு புனித செபஸ்தியாரின் தேர்ப்பவனி நடை பெறுகிறது. 5-ந் தேதி 8-ம் திருவிழா அன்று காலையில் சோமநாதபேரி பங்குதந்தை ஜெகதீஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இத்திருப்பலியில் பள்ளி மாணவ, மாணவிக ளுக்கு புதுநன்மை வழங்கப்படுகிறது. 6.30 மணிக்கு நற்கருனைபவனி நடைபெறுகிறது. கோட்டார் மறைமாவட்டம் அமலநாதன், புருனோ, அன்பரசன் மறையுரை வழங்குகிறார்.

    6-ந் தேதி 9-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு அந்தோணி ராஜா தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. 6.30 மணிக்கு தூத்துகுடி மறைமாவட்ட முன்னாள் ஆயர் மேதகு இவான் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து. இரவு 9 மணிக்கு கலர் வானவேடிக்கையும், கேரள புகழ் ஜெண்டா மேளமும். இரவு 11 மணிக்கு புனித செபஸ்தியாரின் அலங்கார தேர்ப்பவனியும் நடை பெறுகிறது. இப்பவனியில் திரளான பக்தர்கள் பங்கேற்று உப்பு, மிளகு காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள். 7-ந் தேதி 10-ம் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை 5.30 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் மேதகு ஸ்டீபன் அந்தோனி தலைமையில் கூட்டுத் திருப்பலி ஆற்றுகிறார்.

    பின்னர் மாலை ஆராதனையும் அதனைத் தொடர்ந்து கொடி யிறக்கத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா அருள் செபஸ்தியான், பொருளாளர் மகான் அந்தோணி, செயலாளர் லியோ ஜெபநீலன், பங்கு தந்தை டென்ஸில் ராஜா, நிர்வாக பொறுப்புத்தந்தை அருள்மணி, முத்துலாபுரம் இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    ×