search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிழ தமிழக கட்சி"

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. அக்கட்சிக்கு தென்காசி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    தென்காசி தொகுதியில் தனிச்சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கிருஷ்ணசாமி அறிவித்தார், இதனையொட்டி, டிவி சின்னம் கோரி தேர்தல் ஆணையத்தில் அவர் விண்ணப்பித்தார். ஆனால் தேர்தல் ஆணையம் இன்னும் சின்னத்தை ஒதுக்கவில்லை.

    இந்நிலையில், தென்காசி தொகுதியில் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

    • கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • அதிமுகவுடன் புதிய தமிழக கட்சி கூட்டணி அமைக்க கூடும்.

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான பணியில் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

    கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்தித்துள்ளார்.

    மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் புதிய தமிழக கட்சி கூட்டணி அமைக்க கூடும் என தகவல்கள் வெளியான நிலையில் சந்தித்துள்ளார்.

    ×