search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய வகுப்பறை"

    • ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது.
    • புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா நேற்று நடந்தது.

    கடையம்:

    ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கடையம் ஊராட்சி ஒன்றியம் முதலியார் பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.

    இதனை ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் முதலியார்பட்டி பஞ்சாயத்து தலைவர் அ.முகைதீன்பீவி மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.30 லட்சத்தில் கட்டப்படுகிறது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த கட்டேரி ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கவுன்சிலர் ஜெ.சிந்துஜா ஜெகன் தலைமை தாங்கினார். கிழக்கு ஒன்றிய செயலாளர் மாவட்ட கவுன்சிலருமான கவிதா தண்டபாணி, ஜோலார்பேட்டை ஒன்றிய குழு தலைவர் எஸ். சத்யா சதீஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் ஜோலார்பேட்டை தொகுதி எம்எல்ஏவுமான க. தேவராஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கூடுதல் வகுப்பறை கட்டிடத்திற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியின் போது ஊராட்சி மன்ற தலைவர் மாதவன், துணைத் தலைவர் பாத்திமா சாது உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள உகாயனூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொல்லிக் காளிபாளையம் அரசு தொடக்கப் பள்ளிக்கு 2 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் சேமிப்பு நிதியிலிருந்து ரூ. 20 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களை பொங்கலூர் வட்டார உதவி தொடக்க கல்வி அலுவலர் பூங்கொடி வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி கனகராஜ், துணைத் தலைவர் செல்வராஜ், ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய பள்ளி கட்டிடத்தை பொங்கலூர் ஒன்றிய குழு தலைவர் வக்கீல் எஸ். குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் பாலசுப்ரமணியம், சிவாச்சலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதே வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ரூ.16 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி வளர்ச்சி குழு சார்பில் கட்டப்பட உள்ள இந்த பூமி பூஜை நிகழ்ச்சியில் அறக்கட்டளை தலைவர் ரத்தினசாமி, ஆசிரியர் சங்க தலைவர் ராஜேந்திரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள் கிருஷ்ணவேணி,மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×