search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய மையங்கள்"

    • நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.
    • அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.

    திருப்பூர்:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்வுக்கான பணிகளை தேர்வுகள் துறை இயக்குனரகம் துவக்கியுள்ளது.முதல்கட்டமாக ஏற்கனவே மாவட்ட அளவில் உள்ள தேர்வு மையங்கள், புதிதாக அமைக்க வேண்டிய தேர்வு மையங்கள் குறித்த விபரங்களை கருத்துருவாக தயார் செய்ய மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுகள் துணை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தேர்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என கருத்தப்படும் பள்ளிகளை நேரில் சென்று ஆய்வு செய்து, அவசியம் அமைத்தே ஆக வேண்டும் எனில் அதற்கான காரணத்தை தெளிவாக குறிப்பிட்டு குறிப்புரையுடன், கருத்துரு தயாரிக்க வேண்டும்.

    தற்காலிக (ஓராண்டு மட்டும்) தேர்வு மையம் அமைக்க, அனுமதிக்கப்பட்ட பள்ளிகள் தொடர்ந்து தேர்வு மையமாக செயல்பட வேண்டுமெனில் மீண்டும் கருத்துரு அனுப்பி இயக்குனரின் ஒப்புதல் கட்டாயம் பெற வேண்டும். அரசாணையில் உள்ள விதிகளை பின்பற்ற வேண்டும். அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் தேர்வுமையம் வேண்டி பரிந்துரை செய்தால் துறை அலுவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும். புதியதாக தேர்வு மையம் கோரும் பள்ளிகள் அரசு அங்கீகாரம் பெற்றிருப்பதை விதிகளின்படி செயல்படுவதை உறுதி செய்து பின் இறுதி கருத்துரு 25-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2022 - 23ம் ஆண்டு பொதுத்தேர்வு நடந்த போது 10-ம் வகுப்புக்கு 106, பிளஸ் 2 வகுப்புக்கு, 92 மையங்களில் அமைக்கப்பட்டது.நடப்பு கல்வியாண்டு மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப தேர்வு மையங்கள் எண்ணிக்கை உயர்த்தப்படுமா என்ற விபரங்கள் இம்மாத இறுதியில் தெரியவரும் என்றனர்.

    ×