search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய படிப்புகள்"

    • அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
    • வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்பங்களை மையப்படுத்தி வரும் கல்வியாண்டில் இரண்டு புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ், மிஷின் லேர்னிங், டிரோன், ரோபோடிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்கள் வரவால் அனைத்து துறைகளிலும் அபரிவிதமான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

    வேளாண் துறையிலும் தொழில்நுட்ப பயன்பாடு என்பது தவிர்க்க முடியாததாகியுள்ளது. ஆட்கள் பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மக்கள் தொகை பெருக்கம் போன்ற சவால்களை தொழில்நுட்ப உதவிகளுடன் கூடிய கண்டுபிடிப்புகளை வைத்தே எதிர்கொள்ள இயலும்.அதன்படி வேளாண் பல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரி பிரிவில், பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி, எம்.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்புகள் வரும் கல்வியாண்டு துவங்கவுள்ளன.

    இது குறித்து துணைவேந்தர் கீதாலட்சுமி கூறுகையில் வேளாண் துறையில், ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பயன்பாடு அவசியம். அதற்காக, வேளாண் மாணவர்கள் தயாராகவேண்டியது அவசியம். பி.டெக்., அக்ரி இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் செயல்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டது. தற்போது பாடத்திட்டம் நவீன தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தி அறிமுகப்படுத்த பணிகள் நடந்து வருகின்றன.பி.டெக்., பிரிவு அறிமுகப்படுத்தலாமா அல்லது எம்.டெக்., அறிமுகப்படுத்தி அனைத்து வேளாண் மாணவர்களும் இதில் சேரும் வகையில் செய்யலாமா, இரண்டும் அறிமுகப்படுத்தலாமா போன்ற ஆலோசனையில் சிறப்பு குழு ஈடுபட்டுள்ளது என்றார்.

    ×