search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய நிர்வாகி"

    • பதவியேற்பு விழா நடந்தது.
    • வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நகர் அரிமா சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடந்தது. விழாவிற்கு முன்னாள் மாவட்ட ஆளுநர் பாரி பரமேசுவரன் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட ஆளுநர் மணிகண்டன், முதல் துணை ஆளுநர் டாக்டர் சசிக்குமார், மண்டல தலைவர் ஜெயச் சந்திரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். வட்டார தலைவர் பாலாஜி வரவேற்றார்.

    விழாவில் தலைவராக ராமசந்திரன், செயலா ளராக பாலசுந்தரம், பொரு ளாளராக கிருஷ்ணமூர்த்தி மற்றும் புதிய நிர்வாகிகள் பதவியேற்றனர். பின்னர் பயனாளிகளுக்கு ஆடை கள், அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விருதுகள், தீயணைப்புத்துறைக்கு பாதுகாப்பு உபகரணங்கள், அங்கன்வாடி குழந்தை களுக்கு விளையாட்டு உப கரணங்கள், பார்வையற்ற மாற்றுதிறனாளிகள் இல்லத்திற்கு அன்னதானம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    இதில் நிர்வாகிகள் சிவக்குமார், பாபநாசம், பொன்னையா, குருசாமி, காந்திராஜன், சிவசங்கரன், சங்கு, பாபுசரவணன், சோழவந்தான் நகர்தலைவர் மருதுபாண்டியன் உள்பட பலர்கலந்து கொண்டனர்.

    • சேவை திட்டத்தை துணை ஆளுநர் நித்யானந்தம் தொடங்கி வைத்தார்.
    • உடுமலை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 6 அடி உயரமுள்ள குளிர்சாதன பெட்டியும், ரிசப்ஷன் சேர்களும் வழங்கப்பட்டது.

    உடுமலை :

    உடுமலையில் ராயல்ஸ் லயன்ஸ் கிளப்பின் புதிய தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவி ஏற்கும் விழா எரிப்பாளையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் ரூ. 4 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில் வட்டாரத்தலைவர் என்ஜினீயர் எஸ்.ராஜசுந்தரம் வரவேற்றார். தலைமை விருந்தினராக மதுரை மாவட்ட தலைமை நீதிபதி பி. வடமலை பங்கேற்று சிறப்புரையாற்றினார். உடுமலை ராயல் லைன்ஸ் கிளப்பின் புதிய தலைவராக உடுமலை மொபைல்ஸ் ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் கே. யோகானந்த், நிர்வாக செயலாளராக சி.மணி, செயலாளராக எம். முருகேசன், பொருளாளராக நந்தகோபால்ஆ கியோர் தேர்வு செய்யப்பட்டு முன்னாள் மாவட்ட ஆளுநர் ஏ.நடராஜன் முன்னிலையில் பதவி ஏற்று கொண்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக சேவை திட்டத்தை துணை ஆளுநர் நித்யானந்தம் தொடங்கி வைத்தார். கணியூர் ஆஸ்பத்திரிமேடு பகுதியை சார்ந்த ஆறுமுகம் ( மாற்றுத் திறனாளி ) என்பவருக்கு ரூ.50,000 மதிப்புள்ள பெட்டிக்கடை நன்கொடையாக வழங்கப்பட்டது.மேலும் உடுமலை அரசு மருத்துவமனையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ரத்த வங்கிக்கு 6 அடி உயரமுள்ள குளிர்சாதன பெட்டியும், ரிசப்ஷன் சேர்களும் வழங்கப்பட்டது. மடத்துக்குளம் பகுதியைச் சார்ந்த நாகராஜ் என்பவருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டது.

    மலையாண்டி கவுண்டனூர் அரசு பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் டிவி, ஹோம் தியேட்டர் வசதியுடன் வழங்கப்பட்டது.ஏரி பாளையம் அருகில் உள்ள மழலையர் பள்ளிக்கு 5 சேர் ,1 டேபிள்கள் வழங்கப்பட்டது.25க்கும் மேற்பட்டவர்களுக்கு கேட்கும் திறனை திருப்பிக் கொடுக்கும் கருவி நன்கொடையாக அளிக்கப்பட்டது. இதில்கௌரவ விருந்தினராக ஆர். கே.ஆர் கல்விக்குழுமத்தின் நிறுவனர் ஆர். கே. ராமசாமி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

    மேலும் புதிய உறுப்பினர்களை இணைக்கும் நிகழ்வினை முன்னாள் தலைவர் துரைசாமி தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் .நிகழ்ச்சியில் 40க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் லயன்ஸ் கிளப்பில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் பட்டய தலைவர் வக்கீல் எம்.கண்ணன் ,முன்னாள் தலைவர்.பன்னீர்செல்வம், முன்னாள் தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் உடுமலை பகுதியில் கொரோனா காலத்தில் சிறப்பாக செயலாற்றி யவர்களுக்கும் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கும் கேடயங்கள் வழங்கப்பட்டது.மேலும் இந்த நிகழ்ச்சியில் கிளப் டைரக்டர்ஸ், கேபினட் அப்பீஸியல்ஸ், முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள்கலந்து கொண்டனர்.

    ×