search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய தொழில் கொள்கை"

    • உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.
    • தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான வளர்ச்சியை உறுதி செய்திட தயாரிக்கப்பட்டுள்ள "தென்னை நார் கொள்கை 2024"-யை வெளியிட்டார்.

    தென்னை நார் துகள் மற்றும் தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்கான அதி நவீன ஆய்வகம் நிறுவப்படும். மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமான சிறப்பு மையங்களை உருவாக்குவது தென்னை நார் கொள்கையின் நோக்கமாகும். இம்மையங்கள் புதிய மதிப்பு கூட்டப்பட்ட தயாரிப்புகளுக்கான ஆராய்ச்சி, விவசாயம் மற்றும் தோட்டக்கலையில் மண்ணில்லா வளர்ப்பு ஊடக பயன்பாடு, புத்தொழில்கள் மற்றும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பயன்பாடு, தென்னை நார் சார்ந்த தொழில்களின் போட்டித் தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்.

    உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் சந்தையை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் வகுக்கப்படும்.

    இந்த புதிய கொள்கையானது கிராமப்புற பொருளாதார முன்னேற்றம், மகளிர் வேலைவாய்ப்பு, தென்னை விவசாயிகளுக்கான வருமானத்தினை அதிகரித்தல் புதுமை, போட்டித்திறன் மற்றும் பொறுப்புடன் கூடிய நிலையான வளர்ச்சி மூலம் புதிய சகாப்தத்தை அடைய வழிகோலுகிறது.

    இந்நிகழ்வின்போது, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.


    பணிபுரியும் மகளிர் விடுதிகளின் தேவை தற்போது அதிகரித்து வருவதைத் கருத்தில் கொண்டு, கூடுவாஞ்சேரி, திருச்சி ஆகிய இடங்களில் 226 மகளிர் தங்கும் வகையில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்கள், அடையாறு, விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், வேலூர், திருநெல்வேலி மற்றும் பெரம்பலூர் ஆகிய இடங்களில் 458 மகளிர் தங்கும் வகையில் புதுப்பிக்கப்பட்ட 7 பணிபுரியும் மகளிருக்கான விடுதிக் கட்டிடங்கள் ஆகியவை முதலமைச்சரால் 13.7.2023 அன்று திறந்து வைக்கப்பட்டு, செயல்பட்டு கொண்டிருக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பணிபுரியும் மகளிர் பயன்பெறும் வகையில் தாம்பரம் சானடோரியம் பகுதியில், நான்கு தளங்களில் 18 கோடி ரூபாய் செலவில் 461 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள பணிபுரியும் மகளிர் விடுதிக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், கீதா ஜீவன் கலந்து கொண்டனர்.

    தாம்பரம் சானடோரியத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் இ. கருணாநிதி, செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், தாம்பரம் ஆணையர் அழகு மீனா கலந்து கொண்டனர்.

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.134.29 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள 6 புதிய மற்றும் 4 மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள்,

    தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ.11.65 கோடி செலவிலான கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    ×