search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிராணிகள் வதை தடுப்பு"

    • கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மீது காவல்துறை சட்ட நடவடி க்கை எடுக்க வேண்டும்.
    • பிராணிகள் வதை நிகழ்வுகள் ஏற்படும் போது, அதை தடுக்கும் வண்ணம் சங்க உறுப்பினர்கள் காவல்துறையை அணுகி வழக்கு தொடர வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட பொதுமக்கள் பிராணிகள் வதை புகார்களை தெரிவிக்க செல்போன் மற்றும் தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக, கால்நடை பராமரிப்புத்துறை, வருவா யத்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, பள்ளி கல்வித்துறை, ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் அரசு சாரா பிராணிகள் வதை தடுப்பு சங்க நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான நிர்வாக குழுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்பு சங்கத்திற்கு ஓசூர் மாநகராட்சி பகுதியில் கட்டிடம் கட்டுவது. பொதுமக்கள் பிராணிகள் வதை புகார்களை ஓசூர் மாநர பகுதிக்கு 04344&242592 மற்றும் 7667575269 என்ற எண்ணிலும், ஓசூர் வருவாய் கோட்ட பகுதிக்கு 9445032560 என்ற எண்ணிலும், கிருஷ்ணகிரி வருவாய் கோட்ட பகுதிக்கு 9786589099 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

    இந்த சங்கத்தில் இணைவதற்கு சங்க உதவி தலைவர் நரேஷ் என்பரை 9043016324 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு ரூ.300 பணம் செலுத்தி சங்க உறுப்பினர்களாக சேர்ந்துகொள்ளலாம்.

    மேலும், மாவட்டத்தில் பிராணிகள் வதை நிகழ்வுகள் ஏற்படும் போது, அதை தடுக்கும் வண்ணம் சங்க உறுப்பினர்கள் காவல்துறையை அணுகி வழக்கு தொடரும் போதும், முறையிடும் போதும் அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    பிராணிகள் வதை நிகழ்த்துபவர்கள் மீதும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமான கால்நடைகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்கள் மீது காவல்துறை சட்ட நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    பள்ளிக்கூடங்களில் பிராணிகள் வதை தடுப்பு குறித்த விழிப்புணர்வை பள்ளி கல்வித்துறை மாணவர்களிடையே ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் டாக்டர்.ராஜேந்திரன், உதவி இயக்குநர்கள் மரியசுந்தரம், அருள்ராஜ், இளவரசன், ரவிச்சந்திரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள், பிராணிகள் வதை தடுப்பு சங்க அரசு சாரா நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    • கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம்.
    • கால்நடை பன்முக பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்டத்தில் பிராணிகள் வதை தடுப்புச் சங்கத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருப்பூா் கால்நடை பன்முக மருத்துவமனை வளாகத்தில் பிராணிகள் வதைத் தடுப்புச் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த சங்கத்தில் உறுப்பினராக சோ்பவா்களுக்கு ஆண்டு சந்தாவாக ரூ.100, ஆயுள்கால சந்தாவாக ரூ.500 கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த சங்கத்தில் உறுப்பினராக சேர ஆா்வம் உள்ளவா்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தகம் அல்லது கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இயக்குநா் அலுவலகத்தை அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×