search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.எஸ்.ஐ."

    • குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், ஓரளவுக்கு குடிநீரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.
    • குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டும்.

    உடுமலை :

    தற்போது பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் முக்கிய இடங்களில் குடிநீரின் தேவை அதி கரித்து வருகிறது. மேலும் தனியார் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், ஓரளவுக்கு குடிநீரின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    இவ்வாறு உணவு வர்த்தகத்தில் ஈடுபடும் ஓட்டல்கள், சாலையோர உணவுக்கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்களில் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்து லைசென்ஸ் பெற வேண்டும். இதன்வாயிலாக நுகர்வோருக்கு பாது காப்பான, சுகாதாரமான உணவு, குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கோடை துவங்கி உள்ளதால் திருப்பூர் மாவட்டத்தில் தண்ணீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால் பல இடங்களில், பி.எஸ்.ஐ., முத்திரை பெறாத குடிநீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படு கின்றன. தவிர பாக்கெட் குடிநீர், பாட்டிலில் அடைக்கப்பட்ட ஜூஸ், பழச்சாறு விற்பனையும் அதிகரித்து வருகிறது.

    இதனால் நகரில் ஆங்கா ங்கே விற்கப்படும் குடிநீர் பாட்டில்களின் தரத்தை துறை ரீதியான அதிகாரிகள் ஆய்வு நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து தன்னார்வ லர்கள் கூறிய தாவது:- மாவட்டத்தில் முறையான அனுமதி பெறாமல் குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்குவதாக புகார் உள்ளது. பி.ஐ.எஸ்., அனுமதி இல்லாமல் பாக்கெட், பாட்டில் குடிநீர் ஒருபோதும் விற்பனை செய்யக்கூடாது.பி.ஐ.எஸ்., அனுமதி பெற காலதாமதம், ஏராளமான நடைமுறை சிக்கல் இருப்ப தால் சில நிறுவ னங்கள் மூலிகை குடிநீர், 'பிளேவர்டு டிரிங்கிங் வாட்டர்' என குடிநீர் விற்பனை செய்கின்றனர். ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×