search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பால்குட திருவிழா"

    • மகாமாரியம்மன் கோவிலில் பால்குட திருவிழா நடை பெற்றது.
    • சட்டநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகுகாவடி, கரகங்களுடன் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    மயிலாடுதுறை:

    குத்தாலத்தில் மகா மாரியம்மன் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழாவையொட்டி கடந்த 1-ந்தேதி அம்மன் வீதி உலா நடந்தது. நேற்றுமுன்தினம் பால்குட திருவிழா நடந்தது.

    முன்னதாக காவிரி தீர்த்த படித்துறையில் இருந்து புறப்பட்ட பால்குடங்கள் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் நடந்தது.

    சீர்காழி தேர் தெற்கு வீதியில் பத்ரகாளியம்மன் கோவிலில் தீமிதிவிழாவையொட்டி பக்தர்கள் சட்டநாதர் கோவிலில் இருந்து பால்குடம், அலகுகாவடி, கரகங்களுடன் ஊர்வலமாக எடுத்துவந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.

    பின்னர் கோவிலின் முன்பு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

    • மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடைபெற்றது
    • பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம் இதில் வேண்டுதல் நிறைவேறிய 250 க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மஞ்சள் ஆடை உடுத்தி, பய பக்தியுடன் கடந்த ஒரு வாரமாக விரதமிருந்து மருவத்தூர் அம்மன் குளத்தில் சக்தி அழைத்து அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும், பால்குடங்களை தலையில் சுமந்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தினர்.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

    • ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது
    • பனங்குளம், குலமங்கலம் மற்றும் வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் நகரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால் குடம் எடுத்து வழிபாடு. குதிரைகள் ஆடியவாறே முன்னால் செல்ல பால் குடங்களோடு பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்ற பக்தர்கள் சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலம் முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை காப்புக்கட்டுதலோடு தொடங்கியது. 7-ம் நாள் திருவிழாவாகிய நேற்று கிராமத்தை சேர்ந்த பெண்கள் பலரும் தங்கள் பகுதிகளில் இருந்து ஊர்வலமாக தலையில் பால் குடங்களை சுமந்தவாறு கோவிலுக்குச் சென்று அம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

    பேருந்து நிலையம் அருகே திரண்ட பெண்கள் மற்றும் பக்தர்கள் 5-க்கும் மேற்பட்ட அலங்கார குதிரைகள் நடனமாட, மேள தாளங்களோடு கீரமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து கோவில் வரை ஊர்வலமாக சென்றனர். பனங்குளம், குலமங்கலம் மற்றும் வட்டார கிராம பொதுமக்கள் மற்றும் நகரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

    இன்று 8-ம் நாள் திருவிழாவாக பொங்கல் நிகழ்ச்சியும், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை (திங்கட்கிழமை) தேரோட்டமும் நடைபெற உள்ளது.

    ×