search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாலதண்டாயுதபாணி கோவில்"

    • மதுரை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நடந்தது.
    • விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    வாடிப்பட்டி

    வாடிப்பட்டி அருகே குலசேகரன்கோட்டை பாலதண்டாயுதபாணி கோவிலில் கார்த்திகை தீப திரு விழா நடந்தது. பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அர்ச்சனைகள் செய்யப்பட்டது. மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறத்தில் மலை மீதுள்ள தீப கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதை பேரூராட்சி தலைவர் பால்பாண்டி தொடங்கி வைத்தார். கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் முன்னிலை வகித்தார். பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நித்திய பிரியா தலைமையில் போலீசார் செய்திருந்தனர். விழா ஏற்பாடுகளை சொக்கையா சுவாமி பேரப்பிள்ளைகள் மற்றும் கார்த்திகை தீப குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர்.

    • பாலதண்டாயுதபாணி கோவிலில் திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் 9-ந் தேதி நடக்கிறது
    • பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    சத்தியமங்கலம்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பநாயக்கன் பாளையம் டேம் ரோடு கொடுமடுவு பால தண்டாயு தபாணி கோவிலில் வரும் 9-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு திருமண தடை நீக்கும் சுயம்வரா பார்வதி யாகம் நடக்கிறது. இதில் திருமணமாகாதா ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதில் விநாயகர் வழிபாட்டுடன் பூஜை தொடங்கி சனி பகவான் தோஷம், நவகிரக தோஷம், மாங்கல்ய தோஷம் ராகு, கேது தோஷம், பிரம்ம ஹத்தி தோஷம், சிஹத்தி தோஷம், நாக தோஷம், ருது தோஷம், செவ்வாய் தோஷம் ஆகியவை விலக சிறப்பு பூஜைகள் மற்றும் விஷேச வழிபாடு நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து பித்ருகள் வழிபாடு, முன்னோர் சாபம் விலக குலதெய்வ வழிபாடு, தட்சிணா மூர்த்தி வழிபாடு, செல்வம், ஆயுள், ஞானம் நன்மக்கள் பேறு பெற பிரம்மா வழிபாடு, கல்வி, ஞானம் பெற சரஸ்வதி வழிபாடு, தொழில் விருத்தி, வறுமை நீங்கி கடன் தொல்லை தீர மகா விஷ்ணு வழிபாடு ஆகியவை நடக்கிறது.

    தொடர்ந்து பார்வதி- பரமேஸ்வரன் திருக்கல் யாணம் நடக்கிறது. இதில் கலந்து கொண்ட 80 சதவீதம் பேருக்கு திருமணம் நடந்துள்ளது. அவர்கள் இந்த ஆண்டு தம்பதிகளாக பூஜையில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த பூஜையில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. பூஜை பொருட்கள் மற்றும் ஜாதக ஜெராக்ஸ்சுடன் கலந்து கொள்ள வேண்டும். வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்களுக்கு கோவில் வளாகத்தில் பாதுகாப்பான இட வசதி, உணவு ஆகிய வசதிகள் செய்யபப்ட்டு உள்ளது. மேலும் கோபி செட்டிபாளையம், சத்திய மங்கலத்தில் இருந்து அரசு சிறப்பு பஸ் வசதி உள்ளது.

    திருமண தடை நீக்கும் திருத்தலங்களான பவானி கூடுதுறை, திருமணஞ்சேரி, காளஹஸ்தி, திருப்பதி, திருநள்ளாறு, ராமேஸ்வரம், ஸ்ரீரங்கத்தில் செய்யப்படும் பூஜை, வழிபாடுகள், சாப விமோசனங்கள் விலக சிறப்பு யாக பூஜைகளும் இங்கு இலவசமாக செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


    ×