search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு விஷம் கடத்தல்"

    • சிலர் பாம்பு விஷத்தை கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • பாம்பு விஷம் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    பாம்புகள் கொடியவை என்றாலும் அவற்றின் விஷம் சில மருத்துவ தேவைகளுக்கு பயன்படுகிறது. இதனால் பலரும் சட்ட விரோதமாக பாம்பு விஷத்தை கடத்துகின்றனர். இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இருந்து வெளி நாடுகளுக்கு சிலர் பாம்பு விஷத்தை கடத்தி பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் பத்தனம் திட்டா போலீசார் விசாரணையில் இறங்கினர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொண்டேட்டி பகுதியில் உள்ள ஒரு விடுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 3 பேர் சந்தேகப்படும் வகையில் இருந்தனர். அவர்கள் வைத்திருந்த குடுவையை சோதனை செய்தபோது, அதில் பாம்பு விஷம் இருப்பது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர்.

    விசாரணையில் அவர்கள் கொன்னியை சேர்ந்த குமார், பிரதீப் நாயர் மற்றும் கொடுங்க ல்லூர் பஷீர் என தெரிய வந்தது. இதில் குமார் அரு வாப்புலம் கிராம பஞ்சாயத்து முன்னாள் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×