search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாம்பு புகுந்தது"

    • அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது.
    • சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது.

    கடலூர்:

    கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் நூற்று க்கணக்கான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்து வமனை வளாகத்தில் மாவட்ட காச நோய் மையம் உள்ளது. இந்த நிலையில் துப்புரவு பெண் ஊழியர் ஒருவர் காசநோய் மையம் வளாகத்தில் சுத்தம் செய்வதற்காக ஓரத்தில் இருந்த துடைப்பத்தை எடுப்பதற்கு சென்றார்.

    அப்போது சிறிய அளவிலான பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் துப்புரவு ஊழியர் அலறி அடித்து ஓடி அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தார். பின்னர் அவர்கள் வன ஆர்வலர் செல்லாவிடம் தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் வன ஆர்வலர் செல்லா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கிருந்த சிறிய அளவிலான நல்ல பாம்பை லாவகமாக பிடித்து பாட்டிலில் அடைத்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை தொடர்ந்து கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகம் முழுவதும் செடிகளும் முட்பு தர்களும் அதிக அளவில் உள்ளன. ஆகையால் மருத்துவமனை நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்தி பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் அதிக அளவில் வரக்கூடிய தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் ஏதேனும் பாம்புகள் உள்ளதா? என்பதனை கண்டறிந்து அதனை பிடிப்பதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

    ×