search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் நியூசிலாந்து தொடர்"

    • 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.
    • பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது.

    கராச்சி:

    பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 438 ரன் எடுத்தது. பின்னர் விளையாடிய நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 612 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 174 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணி நேற்றைய 4-ம் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 77 ரன் எடுத்திருந்தது.

    கைவசம் 8 விக்கெட் உள்ள நிலையில் இன்று 5-வது நாள் ஆட்டத்தை தொடங்கியது பாகிஸ்தான். அந்த அணி டிரா செய்யும் நோக்கில் ஆடியது. நௌமன் அலி மற்றும் பாபர் அசாம் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். பாகிஸ்தானின் எஞ்சிய 6 விக்கெட்டுகளை கைப்பற்ற நியூசிலாந்து முயற்சித்து வருகிறது. இதனால் பரபரப்பான கட்டத்தில் முதல் டெஸ்ட் உள்ளது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • கேப்டன் பாபர் அசாம், ஆகா சல்மான் சதமடித்து அசத்தினர்.

    கராச்சி:

    பாகிஸ்தான், நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கராச்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் 438 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்திய கேப்டன் பாபர் அசாம் 161 ரன்னில் அவுட்டானார். ஆகா சல்மான் 103 ரன்னில் ஆட்டமிழந்தார். சப்ராஸ் அகமது 86 ரன்னில் வெளியேறினார்.

    நியூசிலாந்து சார்பில் சவுத்தி 3 விக்கெட், அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல், ஐஷ் சோதி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 165 ரன்கள் எடுத்திருந்தது. லாதம் 78 ரன்னுடனும், கான்வே 82 ரன்னுடனும் அவுட்டாகாமல் இருந்தனர்.

    இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. டேவன் கான்வே 92 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம் சதமடித்து 113 ரன்னில் அவுட்டானார். டாம் லாதம், கான்வே ஜோடி முதல் விக்கெட்டுக்கு 183 ரன்கள் சேர்த்தது.

    அடுத்து இறங்கிய கேன் வில்லியம்சன் நிதானமாக ஆடி சதமடித்தார். டாம் பிளெண்டல் 47 ரன்னும், டேரில் மிட்செல் 42 ரன்னும் எடுத்தனர்.

    மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 440 ரன்கள் எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் சார்பில் அப்ரார் அகமது 3 விக்கெட்டும், நவ்மான் அலி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் சதம் அடித்தார்.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.

    இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார். தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார்.

    86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் சேர்த்துள்ளது. பாபர் அசாம் 161 ரன்களுடனும் (277 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்), அஹா சல்மான் 3 ரன்னுடனும் அவுட் ஆகாமல் உள்ளனர். நியூசிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    இதனையடுத்து இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரிலேயே பாபர் அசாம் அவுட் ஆனார். அவர் 161 ரன்களில் வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். 7 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஆகா சல்மான் மட்டும் நிலைத்து ஆடி சதம் அடித்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 438 ரன்கள் எடுத்தது.

    நியூசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்டும் சுழற்பந்து வீச்சாளர்கள் அஜாஸ் பட்டேல், பிரேஸ்வெல் செளதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    • விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது 86 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • கேப்டன் பாபர் அசாம் 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சென்றுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுகிறது. இதன்படி பாகிஸ்தான்-நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.

    பாகிஸ்தான் அணி அண்மையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் தாரை வார்த்தது. சொந்த மண்ணில் 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் முழுமையாக தோற்றது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும். தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடியோடு மாற்றப்பட்டது.

    கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, நஜம் சேத்தி அமர்த்தப்பட்டார். தேர்வு குழுவின் இடைக்கால தலைவராக முன்னாள் கேப்டன் அப்ரிடி நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமின் பதவியும் பறிக்கப்படலாம் என்று தகவல்கள் கசிந்தன. ஆனால் அவருக்கு இன்னொரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து தொடரிலும் அவர் சொதப்பினால் அவரது கேப்டன் பதவிக்கு ஆபத்தாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

    இந்நிலையில் இந்தப்போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணி 110 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்த திணறியது. இதனையடுத்து கேப்டன் பாபர் அசாம் மற்றும் விக்கெட் கீப்பர் சப்ராஸ் அகமது ஜோடி சிறப்பாக ஆடி ஆட்டத்தை மாற்றினார்.

    தொடர்ந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பாபர் அசாம் சதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் ஆடிய சப்ராஸ் அகமது அரை சதம் அடித்தார். 86 ரன்கள் எடுத்திருந்த அவர் கடைசி நேரத்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 317 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் பிரேஸ்வெல், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது.
    • மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமது மீண்டும் விக்கெட் கீப்பராக அணிக்குள் இணைந்துள்ளார்.

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பைனல் செல்லும் வாய்ப்பை இவ்விரு அணிகளுமே இழந்து விட்ட நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

    அஜாஸ் படேலின் 4-வது ஓவரின் 3-வது பந்தில் இறங்கி வந்து அடிக்க முயற்சித்த பாகிஸ்தான் தொடக்க வீரர் அப்துல்லா ஷபிக் பந்தை தவற விட்டதை பயன்படுத்திய விக்கெட் கீப்பர் டாம் ப்ளன்டல் கச்சிதமாக ஸ்டம்பிங் செய்து 7 ரன்களில் அவுட்டாக்கினார். அந்த நிலைமையில் களமிறங்கிய ஷான் மசூத் 10 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் மற்றொரு ஸ்பின்னர் மைக்கேல் பிரேஸ்லெஸ் வீசிய 6வது ஓவரின் முதல் பந்தில் இறங்கி அடிக்க முயற்சித்து பந்தை நழுவ விட்டார். அதை கச்சிதமாக பிடித்த விக்கெட் கீப்பர் டாம் ப்ளெண்டல் மீண்டும் துல்லியமாக ஸ்டம்பிங் செய்து அவரை 3 ரன்களில் அவுட்டாக்கினார்.

    பாகிஸ்தானின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது. பொதுவாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டம்பிங் முறையில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாவது மிகவும் அரிதாகும். அதிலும் போட்டி துவங்கியதுமே பெரும்பாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் தான் பந்து வீசுவார்கள் என்பதால் எட்ஜ், போல்ட், எல்பிடபிள்யு, கேட்ச் ஆகிய முறைகளில் தான் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் அவுட்டாவார்கள்.

    ஆனால் அவை அனைத்திற்கும் விதிவிலக்காக இப்போட்டியில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்த ஸ்டம்பிங் முறையில் 2 விக்கெட்டுகள் விழுந்தன. 145 வருட டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு போட்டியின் முதல் 2 விக்கெட்டுகள் ஸ்டம்பிங் முறையில் விழுந்தது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன் குறிப்பாக ஆடவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வு அரங்கேறியதில்லை. மகளிர் கிரிக்கெட்டில் மட்டுமே ஜமைக்காவில் கடந்த 1976ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு டெஸ்ட் போட்டியில் இதே போன்ற நிகழ்வு நடந்தது.

    ×