search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்"

    • ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும் என கம்ரான் அக்மல் வலியுறுத்தினார்

    கராச்சி:

    பாகிஸ்தானில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு செல்லாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பிசிசிஐ செயலாளருமான ஜெய் ஷா கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்தார். மேலும், ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்படலாம் என்றும் கூறினார்.

    ஜெய் ஷாவின் இந்த கருத்து பாகிஸ்தான் கிரிக்கெட் சமூகத்திடம் இருந்து கடும் கண்டனங்களுக்கு வழிவகுத்தது. ஆசிய கோப்பை போட்டியை பாகிஸ்தான் அல்லாத நடுநிலையான இடத்திற்கு மாற்றப்பட்டால், இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க வாய்ப்பு உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. ஜெய் ஷா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இந்த அறிவிப்புகள் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியாவுக்கு எதிரான டி20 உலக கோப்பை ஆட்டத்தை பாகிஸ்தான் புறக்கணிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "ஜெய் ஷாவின் இந்த பேச்சை நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் கடந்த முறை இந்தியா பாகிஸ்தான் ஆசிய கோப்பையில் விளையாடிய போது அவர் மைதானத்தில் நேரில் வந்து பார்த்தார். ஜெய் ஷா விளையாட்டில் அரசியலை கொண்டுவர கூடாது. ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும். அப்படி இல்லை என்றால் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க கூடாது. இதே போன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோதக் கூடாது' என்றார்.

    வரும் ஞாயிறு அன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். ஆனால், பிசிசிஐ-யின் இந்த நடவடிக்கை, எதிர்வரும் ஐசிசி நிகழ்வுகளில் இந்தியா- பாகிஸ்தான் போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெளிவுபடுத்தியுள்ளது.

    புல்வாமா தாக்குதலை தொடர்ந்து இம்ரான் கான் உள்பட பாகிஸ்தான் வீரர்களின் படங்களை நீக்கியது குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
    சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் தற்போது விளையாடும் வீரர்கள் தங்களது கண்டனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஒரு மைதானத்தில் விளையாடும்போது எந்தநாட்டு வீரர்கள் சாதனை புரிந்தாலும் அவர்களது புகைப்படங்கள் அங்கு வைக்கப்படும். அந்த வகையில் மும்பையில் உள்ள கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் இம்ரான் கான் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அந்தப்படம் தற்போது மூடப்பட்டுள்ளது.

    அதேபோல் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி மைதானத்தில் உள்ள பாகிஸ்தான் வீரர்களின் போட்டோக்களும் நீக்கப்பட்டனது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வருத்தம் அடைந்துள்ளது.

    கிரிக்கெட் வேறு, அரசியல் வேறு என்று கூறும் பாகிஸ்தான், அடுத்த மாதம் துபாயில் ஐசிசி கூட்டம் நடைபெற இருக்கிறது. அப்போது இந்தியாவிடம் இந்த சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.
    2020 ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. ஆனால் போட்டி எங்கு நடைபெறும் என்பது தெரிவிக்கப்படுவதில்லை. #PCB #AsiaCup
    ஆசிய கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற்றது. இந்த தொடர் இந்தியாவில்தான் நடைபெறுவதாக இருந்தது. பாகிஸ்தான் இந்தியா வர மறுப்பு தெரிவித்ததால் மாற்றப்பட்டது.

    தற்போது 50 ஓவர் கிரிக்கெட் தொடர் 20 ஓவராக மாறியுள்ளது. இந்த தொடர் 2020-ல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன் நடைபெற இருக்கிறது. இந்த தொடரை நடத்தும் உரிமையை பாகிஸ்தான் பெற்றுள்ளது. இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கு இடையில் கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருவதால் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெற வாய்ப்புள்ளது.
    ×