search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுர்ணமி பூஜை"

    • புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.
    • இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

    ஏர்வாடி:

    நெல்லை மாவட்டம் புலவன்குடியிருப்பு அரசன் நகரில் சித்தர்கள் வழிபடும் பழனிமலை பாலமுருகன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.

    முருக பெருமான் அறுபடை வீடுகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பாக கருதப்படுகிறது. ஒரு சில கோவில்களில் முருக பெருமான் பக்தர்களை ஆட்கொண்டு அருள்புரிவது போல் இக்கோவிலும் பாலமுருகன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள வெள்ளிமலை அடிவாரத்தில் சித்தர்கள் வாழும் பகுதியாக கருதப்படும் இடத்தில் உள்ளதால் இங்குள்ள முருகனை சித்தர் சாமி என்று பக்தர்கள் அழைக்கின்றனர்.

    இந்த கோவிலில் நேற்று காலை சிறப்பு ஹோமம் நடத்தப்பட்டு, அபிஷேக அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இங்கு கேரள முறைப்படி பூஜைகள் நடைபெறுகிறது. மாலையில் கோவிலில் உள்ள காமாட்சி அம்மன் சமேத வெள்ளி மலை நாதர், வலம்புரி விநாயகர் , பாலமுருகன் சன்னதிகளில் வேள்வி வளர்க்கப்பட்டு அபிஷேக தீபாரதனைகள் நடந்தது. சிவன், அம்பாள், விநாயகர், முருகன் சன்னதிகள் சேர்ந்து இருப்பதால் பக்தர்கள் திருகுடும்ப சாமி சன்னதி என அழைக்கின்றனர். இங்கு வழிபட்டால் திருமண தடை , பில்லி சூனியம், தொழில் நஷ்டம் போன்ற தடைகள் நிவர்த்தி ஆவதாக கூறுகின்றனர். இந்த ஆலயத்தை கணேஷ்குமார் சுவாமிகள் நிர்வகித்து பூஜை செய்து வருகிறார்.

    • புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
    • முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    புளியங்குடி:

    தென்காசி மாவட்டம் அருள் வாக்கிற்கு பிரசித்தி பெற்ற புளியங்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள முப்பெரும்தேவியர் பவானியம்மன் ஆலயத்தில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாகக்கன்னி அம்மன், பாலநாகம்மன் கோவிலில் மாதந்தோறும் நடைபெறும் சிறப்பு பால் அபிஷேகமும், திருவிளக்கு பூஜையும் சிறப்பாக நடைபெற்றது.

    மாலை 6 மணிக்கு ஆவணி மாதம் பவுர்ணமி பூஜையின் சிறப்பு குறித்து கோவில் குருநாதர் சக்தியம்மா ஆன்மீக சொற்பொழிவாற்றினார்.

    மாலை 6.30 மணியளவில் முப்பெரும்தேவி அம்மனுக்கு பச்சை அரிசி மாவு, பன்னீர், மஞ்சள், இளநீர், பழங்கள், திருநீர், தயிர், குங்குமம், தேன், சந்தனம், நறுமணப் பொருள்கள் உள்பட 18 வகையான அபிஷேகங்களும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் பிரார்த்தனைகள் நடைபெற்றது.

    பின்னர் 1008 லிட்டரில் சிறப்பு பால் அபிஷேகம் குருநாதர் சக்தியம்மா தலைமையில் நடந்தது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள பாலவிநாயகர், புற்றுக்காளி, நாகக்காளி, சூலக்காளி, ரத்தக்காளி, பதினெட்டாம்படி கருப்பசாமி, செங்காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கும் பாலபிஷேகம் நடந்தது.

    முப்பெரும்தேவியருக்கு சிறப்பு மஞ்சள் காப்பு அலங்காரங்கள் செய்து பெரிய தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி மாநில பக்தர்கள் பங்கேற்பு.
    • பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அருகில் உள்ள ஒரப்பம் கிராமத்தில், பார்ஸ்வ பத்மாவதி சக்தி பீடம் (ஜெயின் கோயில்) அமைந்துள்ளது.

    இந்த சக்தி பீடம் உலகில் அதிக உயரமுள்ள சிலைகளைக் கொண்ட ஜெயின் கோயிலாக உள்ளது. இக்கோயிலில் நேற்று குரு பவுர்ணமி பூஜை, கிருஷ்ணகிரி சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் நடந்தன.

    இதில், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் மந்திரங்கள் ஓத மதியம் மூலிகை குளியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் ஜனாதிபதி வேட்பாளரான திரவுபதி முர்முவை கவுரவிக்கும் வகையிலும், சைவ உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், திரவுபதி முர்முவிற்கு 12 அடி உயரத்தில் காய்கறிகள், பழங்களைக் கொண்டு சிலை அமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

    இதே போல், சுதந்திரப் போராட்ட தியாகிகள், தேசத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் உட்பட பல்வேறு துறைகளில் சாதனைப்ப டைத்தவர்களின் உருவங்களை, பழங்கள் மூலம் 100 உருவங்களை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தனர்.

    இதை பா.ஜ., மாநில துணைத் தலைவர் நரேந்திரன், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் தலைமையில் திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    பின்னர், சக்திபீடாதிபதி வசந்த் விஜய்ஜி மகாராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு, சைவ உணவு பழக்கம் உள்ளவராக இருப்பதால், அவரை முன்னிறுத்தி இங்கு சைவ உணவு விழிப்புணர்வு பிரச்சாரமும், அவரை ஆதரிக்கும் விதமாக இங்கு பழங்களால் அவரின் உருவமும் வைக்கப்பட்டுள்ளது. குரு பவுர்ணமி விழாவானது, தமிழகத்திலும், இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக வாழ்ந்து நமக்கெல்லாம் அருள் செய்த அனைத்து துறவிகள், ஞானிகள், இளங்கோ வடிகள், திருவள்ளுவர் போன்ற மகான்களை பழங்களில் உருவங்களாக செய்து கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி சைவ உணவு விழிப்புணர்வுக்காவும், பாரத நாட்டிற்கு எல்லா விதமான நலமும் கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் இங்கு வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, பார்ஸ்வ பத்மாவதி சேவா டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். இதில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

    ×