search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவ நிலை மாற்றம்"

    திண்டுக்கல் மற்றும் புறநகர் பகுதியில் பருவ நிலை மாற்றம் காரணமாக அரசு ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    திண்டுக்கல்:

    தென் மேற்கு பருவமழை தொடங்கிய காலத்தில் இருந்து திண்டுக்கல் நகரில் அவ்வப்போது மழை வருவது போல அறிகுறி தென்பட்டு பின்னர் ஏமாற்றி சென்றது. ஒரு சில நாட்கள் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது.

    ஆடி மாதம் முடிந்த பிறகும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. இது போன்ற மாறுபட்ட பருவ நிலை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    குறிப்பாக குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு வயிற்றுக் கோளாறு, உஷ்ணம், சளி, தோல் அலர்ஜி போன்றவை ஏற்படுகிறது. குடிநீர் வினியோகமும் சீராக இல்லாததால் பொதுமக்கள் சுகாதாரமற்ற தண்ணீரையை குடிக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

    இது போன்ற காரணங்களால் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த 2 நாட்களாக நோயாளிகள் வருகை அதிகரித்துள்ளது. நீண்ட வரிசையில் பெயர் பதிவதற்கும், மருந்து மாத்திரைகள் வாங்குவதற்கும் அவர்கள் காத்து கிடக்கின்றனர்.

    திண்டுக்கல் நகர் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்தும் அதிக அளவு நோயாளிகள் அரசு ஆஸ்பத்திரிக்கு வருவதால் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

    ×