search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயோ கழிவறை"

    • இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது
    • கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    கடலூர்:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மக்கள் நலமுடன் வாழ வேண்டி நடப்போம் நலம் பெறுவோம் என்பதனை வலியுறுத்தி 8 கிலோமீட்டர் நடை பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி கடலூரில் டவுன் ஹாலில் இருந்து தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு சென்று மீண்டும் டவுன் ஹாலில் வந்த முடிவடைவதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் பணிகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை தொடக்க விழா கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் கடற்கரையில் நடைபெற்றது . வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பொதுமக்களுடன் இணைந்து அமைச்சர்கள் எம். ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் நடந்து சென்றனர்.

    நடந்து செல்லும் பொதுமக்கள் அமர்வதற்கு சிமெண்ட் நாற்காலிகள், குடிநீர், பயோ கழிவறை, தற்காலிக நிழற்குடை போன்றவற்றை அமைத்திரு ந்தனர். மேலும் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் மற்றும் காய்கறி, சூப் போன்றவை பொதுமக்களுக்கு வழங்கப்ப ட்டது. இதனைத் தொடர்ந்து நடந்து செல்பவர்களுக்கு உற்சாகப்படுத்தும் நோக்கில் கலை நிகழ்ச்சிகளும் நடனமும் நடைபெற்றது. பொதுமக்கள் சில்வர் கடற்கரையில் இருந்து மிகுந்த ஆசுவாசமாக குளிர்ந்த காற்றில் பொதுமக்கள் ரம்மியமான காட்சிகளை பார்த்தப்படி ஒருவரு க்கொருவர் ஆனந்தமாக பேசிக்கொண்டு சென்றதன் மூலம் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வோடு சென்றனர். அப்போது கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் மாநகர திமுக செயலாளர் ராஜா, மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் கிரேசி அகஸ்டின் பிரபாகரன், ஹேமலதா சுந்தரமூர்த்தி, ஆராமுது, சசிகலா ஜெயசீலன், சுதா அரங்கநாதன், பாலசுந்தர் மற்றும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    ×