search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பன்னோக்கு"

    • கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
    • இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுவது குறித்த துறை அலுவலர்களுடனான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் ஸ்ரீதர் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் மாவட்டந்தோறும் துறை வாரியாக பல்வேறு நலத் திட்ட முகாம்களை நடத்திட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருகிற 24-ந்தேதி சனிக்கிழமை முதற்கட்டமாக காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்டத்திற் குட்பட்ட 4 இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    முகாமில் ரத்த அழுத்த பரிசோதனைகள், சிறுநீர் பரிசோதனைகள், எக்கோ மற்றும் இ.சி.ஜி., பெண் களுக்கான மார்பக புற்று நோய் மற்றும் கர்ப்பபை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை உள்ளிட்ட பரிசோதனைகளுடன் முழு ரத்த பரிசோதனையும் இலவசமாக மேற்கொள்ளப்பட உள்ளது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, மகளிர் மருத்துவம், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல் மருத்துவம், எலும்பியல் மருத்துவம் மற்றும் மனநலம் மருத்துவம் உள்ளிட்ட பன் னோக்கு மருத்துவ ஆலோ சனைகள் சிறப்பு மருத்துவர்களால் வழங்கப்பட உள்ளது. மேலும் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர் வேத சிகிச்சை ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளது.

    மாவட்டத்தில் நாகர்கோ வில் மாநகராட்சி பகுதியில் ஏழகரம் அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட் டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நி லைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி, பரக்குன்னு ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடை பெற உள்ளது. பொதுமக்கள் மருத்துவ முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் ஆசாரிபள் ளம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பையஸ், மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் டாக்டர் பிரகலாதன், நாகர்கோவில் மாநகர்நல அலுவலர் டாக்டர் ராம் குமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×