search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டாசு தடை"

    • தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
    • 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது.

    சிவகாசி:

    தீபாவளி, தசரா உள்ளிட்ட விழாக்களுக்காக சிவகாசியில் இருந்து பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுச்சூழலை காரணம் காட்டி டெல்லி பகுதியில் பட்டாசு வெடிக்க அந்த மாநில அரசு தடை விதித்தது. இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    பின்னர் படிப்படியாக தீபாவளியை தவிர்த்து மற்ற விழா நாட்கள், திருவிழா, அரசியல் நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் போன்றவற்றில் பட்டாசுகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.

    இந்தநிலையில் 5-வது ஆண்டாக இந்த ஆண்டிலும் தீபாவளியின்போது பட்டாசு வெடிக்க டெல்லி அரசு தடை விதித்துள்ளது. இதனால் சிவகாசியிலிருந்து அனுப்பப்படும் ரூ.150 கோடி மதிப்பிலான பட்டாசு வர்த்தகம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்தனர்.

    இந்த வருட தீபாவளிக்கு தேவையான பட்டாசுகளை வாங்க டெல்லி வியாபாரிகள் ஏற்கனவே சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் முன்பணம் செலுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அந்த ஆர்டர்களின் பேரில் டெல்லிக்கு தேவையான பட்டாசுகள் சிவகாசி ஆலைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்தநிலையில் டெல்லி அரசு பட்டாசு வெடிக்க வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை தடை விதித்து நேற்று அறிவித்ததால், டெல்லிக்கு என தயார் செய்துவரும் பட்டாசுகள் தேங்கும் என்றும், இதனால் பல பட்டாசு நிறுவனங்கள் இழப்பை சந்திக்க நேரிடும் எனவும் கூறுகிறார்கள்.

    பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    புதுடெல்லி:

    காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு (2022) உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர்  நீதிமன்றம் தடை விதித்தது.

    இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்தது.

    பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    மேற்கு வங்காள அரசு வேண்டுமானால், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் அது தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தீபாவளி விடுமுறைக்குபிறகு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
    ×