search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்டாசு
    X
    பட்டாசு

    மேற்கு வங்காளத்தில் பட்டாசுகளுக்கு விதித்த தடையை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்

    பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
    புதுடெல்லி:

    காற்று மாசுபடுவதை கட்டுப்படுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் தீபாவளி, காளி பூஜை, சாத் பூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு (2022) உள்ளிட்ட பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா உயர்  நீதிமன்றம் தடை விதித்தது.

    இந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிக்கவும், விற்கவும் கொல்கத்தா நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை ரத்து செய்தது.

    பட்டாசுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது; போலியான பசுமை பட்டாசுகளை கண்டறிய தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

    மேற்கு வங்காள அரசு வேண்டுமானால், தடை செய்யப்பட்ட பட்டாசுகள் மற்றும் அது தொடர்பான பொருட்களை இறக்குமதி செய்யாமல் இருப்பதை உறுதிசெய்யும் சாத்தியக்கூறுகளை ஆராயலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். தீபாவளி விடுமுறைக்குபிறகு இவ்வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும் எனவும் நீதிபதிகள் கூறினர்.
    Next Story
    ×