search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பட்டதாரி இளைஞர்கள்"

    • ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி 20 இளைஞர்களை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு குடிமை ப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
    • இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமு றைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணை யதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

    அரியலூர் :

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சென்னை அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையம் இணைந்து ஆண்டு தோறும் கடல் மற்றும் உள்நாட்டு மீனவ பட்டதாரி 20 இளைஞர்களை தேர்ந்தெ டுத்து அவர்களுக்கு குடிமை ப்பணிகளுக்கான போட்டித் தேர்வில் கலந்து கொள்ள ஏதுவாக பிரத்யேக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

    அதன்படி, நிகழாண்டு கடல் மற்றும் உள்நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள் இப்பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

    இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்ப படிவம் மற்றும் அரசு வழிகாட்டு நெறிமு றைகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் இணை யதளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது விண்ணப்ப படிவங்களை அரியலூர் மாவட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில் அலுவலக வேலை நாள்களில் பெற்று கொள்ளலாம்.

    விண்ண ப்பதாரர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்து றையின் இணை யதளத்தில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறை களின்படி பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு பதிவு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ 31.10.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும், உதவி இயக்குநர் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் (இருப்பு) அரியலூர், அறை எண்.234, இரண்டாவது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டட வளாகம், தொலைபேசி எண்.04329-228699, கைப்பேசி எண்:6381344399 தொடர்பு கொள்ளலாம் என அரியலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அலங்காநல்லூரில் பட்டதாரி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுகிறது.
    • இந்த தகவலை வேளாண்மை துறை தெரிவித்துள்ளார்.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வட்டாரத்தில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பட்டதாரி இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது.

    பயனாளிகள் இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை அல்லது வேளாண் பொறியியல் படிப்பு படித்தவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் 21 வயது முதல் 48 வயது வரை உள்ளவராகவும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியில் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பயனாளிகள் தனது சொந்த மூலதனத்தில் வேளான் சார்ந்த தொழில் செய்ய வேண்டும். நிலம் மற்றும் தளவாடங்கள் போன்ற உள்கட்டமைப்புக்கான செலவுகள் திட்ட மதிப்பீட்டில் சேர்க்கக் கூடாது.

    கலைஞர் திட்ட கிராமங்களான பண்ணைகுடி, அச்சம்பட்டி, மணியஞ்சி, பெரியஇலந்தைகுளம், வடுகபட்டி, தெத்தூர், எரம்பட்டி, சத்திர வெள்ளாளப்பட்டி வலையபட்டி, அய்யூர், முடுவார்பட்டி ஆகிய ஊர்களை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    மேற்கண்ட தகவலை வேளாண் உதவி இயக்குனர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

    ×