search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படப்பிடிப்பு ரத்து"

    • பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பணிகளில் ஈடுபடப் போவதாக கமல் அறிவித்தார்
    • இந்நிலையில் கமல் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்

    நடிகர் கமல்ஹாசன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் மணிரத்னத்துடன் இணைந்து நடிக்கும் புதிய படம் 'தக் லைப்'.இந்த படம் ஒரு 'ஆக்ஷன்' படம் ஆகும்.

    இப்படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் சைபீரியா செல்ல உள்ளனர். சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்த நடிகர் கமல்,இந்த மாதம் சைபீரியா செல்ல இருந்தார்.

    இந்நிலையில் தற்போது கமல் வெளிநாட்டு படப்பிடிப்பு 'ஷெட்யூல்' திடீரென ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் நடிகர் கமல் பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அரசியல் பணிகளில் 'பிஸி' ஆகிவிட்டார்.

    இதனால் படப்பிடிப்புக்காக அதிக நாட்கள் அவரால் ஒதுக்க முடிய வில்லை. இதன் காரணமாக கமல் நடிக்கும் சைபீரியா படப்பிடிப்பு காட்சிகள் தற்போது ரத்து செய்யப்பட்டு உள்ளது. 

    கடந்த சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவாக பிரச்சார பணிகளில் ஈடுபடப் போவதாக கமல் அறிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் சைபீரியாவில் 'தக்லைப்' படப்பிடிப்பு வேலைகள் முழு வீச்சில் நடந்து வந்தன.இந்நிலையில் கமல் இல்லாத காட்சிகளை முதலில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர்.

    • மழை வெள்ளம் காரணமாக கருணாநிதி நூற்றாண்டு விழா ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது.

    தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் ஆர்.கே.செல்வமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ் திரையுலகம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி நடைபெறும் 'கலைஞர் - 100' என்ற விழா, வருகிற 24-ந்தேதி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. தற்போது மழை வெள்ளம் காரணமாக இந்த விழா, ஜனவரி 6-ந்தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

    எனவே ஏற்கனவே விடுமுறையாக அறிவிக்கப்பட்டிருந்த 23, 24-ந்தேதிகளில் படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்று அறிவிக்கப்படுகிறது. ஜனவரி 6-ந்தேதி விழா நடைபெறுவதையொட்டி, ஜனவரி 5, 6-ந்தேதிகளில் படப்பிடிப்பு உள்பட அனைத்து பணிகளும் உள்ளூர், வெளியூர் என எங்கும் நடைபெறாது

    மேலும் ஜனவரி 1-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை நடன காட்சிகளை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். கட்டாய அவசியம் இருந்தால், சிறப்பு அனுமதி பெற்று பாடல் காட்சிகள் அமைக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×