search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நைவேந்தியம்"

    • மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும்

    நரசிம்மருக்கு மிகவும் பிடித்த நைவேந்தியங்களில் பானகமும் ஒன்று. அந்த பானகத்தை எப்படி தயாரிப்பது என்று தெரியுமா?

    தேவையான பொருள்கள்:

    வெல்லம்-250 கிராம்

    தண்ணீர்-4 கப்

    ஏலப்பொடி-2 சிட்டிகை

    சுக்கு-1 சிட்டிகை

    எலுமிச்சம் பழம்-1

    செய்முறை:

    வெல்லத்தை நீரில் நன்கு கரைத்து, தேவைப்பட்டால் வடிகட்டிக் கொள்ளவும். ஏலப்பொடி, சுக்குப் பொடி சேர்த்துக் கலக்கவும். இறுதியில் எலுமிச்சம் பழச் சாறையும் சேர்க்கவும். இரண்டு மூன்று ஐஸ் க்யூப் சேர்த்துக்கொண்டால் சுவையாக இருக்கும்.

    பானக நரசிம்ம ஸ்வாமி ஆலயம்:

    ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் இருக்கிறது மங்களகிரி. இங்கு மலைமீது இருக்கும் பானக நரசிம்மர் ஆலயம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    சுயம்புவான நரசிம்மரின் திருமார்பு வரை மட்டுமே தரிசனம் கிடைக்கும். மீதிப் பாகம் பூமியினடியில் இருப்பதாக ஐதீகம்.

    வாயைத் திறந்தபடி இருக்கும் நரசிம்மரின் வாயில் கோயிலிலேயே விலைக்குக் கிடைக்கும் (கல்கண்டு அல்லது வெல்லப்)பானகத்தை வாங்கிக் கொடுக்கலாம்.

    எத்தனை பானகம் கொண்டு சென்றாலும் எடுத்துச் செல்வதில் பாதியை மட்டுமே ஏற்றுக் கொள்வதாகவும், 'கடக்' என்ற விழுங்கும் சப்தத்தைக் கேட்கமுடிவதாகவும், பாதிக்கு மேல் மீதி ஏற்றுக்கொள்ளப் படாமல் வழிந்துவிடுவதாகவும் சொல்கிறார்கள்.

    மீதியை பக்தர்கள் பிரசாதமாக எடுத்துக் கொள்ளலாம். இஞ்சி, மிளகு போன்றவையும் இந்தப் பானகத்தில் சேர்க்கப்படுகின்றன என்றாலும் ஒரு எறும்பைக் கூட அருகே பார்க்க முடியாது.

    ×