search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுண்ணீர் பாசன மானியம்"

    • நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    ஈரோடு:

    பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 58,000 ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளது.

    கரும்பு, பருத்தி, மக்காசோளம் பயிர்கள் சொட்டு நீர் பாசனம் மூலமும், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் தெளிப்பான், மழை துாவுவான் கருவிகள் மூலம் பயன் பெறுகின்றன. இவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை சென்னை வேளாண் இயக்குனரக உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) கோப்பெருந்தேவி நேரில் ஆய்வு செய்தார்.

    பவானி அருகே மைலம் பாடியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்கப் பட்ட நுண்ணீர் பாசன பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 23 நுண்ணீர் பாசன நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    வரும் காலங்களில் நுண்ணீர் பாசனம் நிறுவும் போது கடைபிடிக்கும் வழிமுறைகளை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    இணை இயக்குனர் சின்னசாமி பேசியதாவது:-

    சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமாக அதிகப்பட்சம், ஏக்கருக்கு, 48,253 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியத்தில் அதிகப்பட்சம் ஏக்கருக்கு, 37,842 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு கடந்த, 5 ஆண்டில், 38,762 ஏக்கர் பரப்பில், 143.54 கோடி ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன் பெற்றனர்.

    குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×