search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கப்பட்டுள்ளது"

    • மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.
    • 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், அரசின் மகப்பேறு சிரஞ்சீவி திட்டம் என பல்வேறு திட்டங்கள் மூலம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர்.

    இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையில் அரசின் மகப்பேறு சஞ்சீவி திட்டம் மூலம் சித்த மருத்துவ பெட்டகம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயனடைந்துள்ளனர்.

    தாய், சேய் இறப்பு விகிதம் குறைக்க, கர்ப்பிணி தாய்மார்களின் ரத்த சோகை தடுக்க சித்த மருந்துகள் வழங்கும் திட்டம் ஈரோடு மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மட்டுமல்லாமல் நகர்ப்புற சுகாதார மைய ங்கள் மற்றும் தாளவாடி, பர்கூர் மலைவாழ் மக்களுக்கும் ரத்த சோகை தடுப்பு சித்த மருந்துகள் ஈரோடு மாவட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் சார்பாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 4094 பேர் பயனடைந்துள்ளனர். அங்கன்வாடி குழந்தை களுக்கு ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் சித்த மருத்து பெட்டகம் 263 குழந்தை களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தில் ஆயுஷ் சிகிச்சையின் மூலம் இதுவரை 23,876 பேர் பயன் அடைந்துள்ளனர். மக்களை தேடி மருத்துவம் மூலம் தொற்றா நோய் களான சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்க ளுக்கு ஆயுஷ் சிகிச்சை அளிக்கப்பட்டு 2,487 நோயாளிகள் பயனடை ந்துள்ளனர்.

    கொரோனா தொற்றுக்காலத்தில் சிறப்பு சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு 699 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு எவ்வித மரணமும் நிகழாமல் சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளனர்.

    கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் வீடுகளுக்கு சென்று நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற மருந்துகள் வழங்கும் திட்டம் மாநிலத்தில் முதல் முதலாக நம் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது.

    இதன் மூலம் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் பயன் பெற்றுள்ளனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
    • குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    ஈரோடு:

    பிரதமரின் நுண்ணீர் பாசன திட்டத்தில் பயன் பெறும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் வேளாண் துறை மூலம் 58,000 ஏக்கரில் சொட்டு நீர், தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப் பட்டுள்ளது.

    கரும்பு, பருத்தி, மக்காசோளம் பயிர்கள் சொட்டு நீர் பாசனம் மூலமும், பயறு வகை பயிர்கள், எண்ணெய் வித்து பயிர்கள் தெளிப்பான், மழை துாவுவான் கருவிகள் மூலம் பயன் பெறுகின்றன. இவை மானியத்தில் வழங்கப்பட்டுள்ளன.

    நடப்பாண்டில், 1,600 ஹெக்டேர் இலக்கு நிர்ணயித்து, 20.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பணிகளை சென்னை வேளாண் இயக்குனரக உதவி இயக்குனர் (நுண்ணீர் பாசனம்) கோப்பெருந்தேவி நேரில் ஆய்வு செய்தார்.

    பவானி அருகே மைலம் பாடியை சேர்ந்த செந்தில் குமார் என்பவர் வயலில் கரும்பு பயிருக்கு அரசு மானியத்தில் அமைக்கப் பட்ட நுண்ணீர் பாசன பணிகள் குறித்தும், துணை நிலை நீர் மேலாண்மை செயல்பாடு திட்டத்தில், 50 சதவீத மானியத்தில் அமைக்கப்பட்ட தரைநிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும் ஆய்வு செய்தனர்.

    பின்னர் ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. அனைத்து வட்டார வேளாண் உதவி இயக்குனர்கள் 23 நுண்ணீர் பாசன நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

    வரும் காலங்களில் நுண்ணீர் பாசனம் நிறுவும் போது கடைபிடிக்கும் வழிமுறைகளை உதவி இயக்குனர் தெரிவித்தார்.

    இணை இயக்குனர் சின்னசாமி பேசியதாவது:-

    சிறு, குறு விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசனம் அமைக்க, 100 சதவீத மானியமாக அதிகப்பட்சம், ஏக்கருக்கு, 48,253 ரூபாய், இதர விவசாயிகளுக்கு, 12.5 ஏக்கர் வரை, 75 சதவீத மானியத்தில் அதிகப்பட்சம் ஏக்கருக்கு, 37,842 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண் பயிர்களுக்கு கடந்த, 5 ஆண்டில், 38,762 ஏக்கர் பரப்பில், 143.54 கோடி ரூபாய் மானியத்தில் நுண்ணீர் பாசனம் அமைக்கப்பட்டு, 15,113 விவசாயிகள் பயன் பெற்றனர்.

    குறைந்த நீராதாரம் கொண்டு சிக்கனமாக பயிர்களுக்கு பாசனம் செய்து அதிக விளைச்சல் பெறலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.
    • லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், கோபிசெட்டி பாளையம் வட்டம் லக்கம்பட்டி பேரூராட்சியில் கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தோட்டக்கலைத்துறை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் கொடி வகை காய்கறி சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர காய்கறி பந்தல் அமைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வி ன்போது கலெக்டர் கிருஷ்ண னுண்ணி கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகிறது.

    அந்த வகையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் தோட்டக்கலைத் துறையின் மூலமாக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்த ப்பட்டு வருகிறது.

    இதில் குறிப்பாக கொடி வகை காய்கறிகளான பீர்க்கன்காய், புடலை, அவரை மற்றும் சுரைகாய் போன்ற காய்கறிகளை சாகுபடி செய்ய நிரந்தர கல்தூண் பந்தல் அமைக்க 50 சதவீதமானியமாக ஒரு எக்டருக்கு ரூ.2 லட்சம் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் இது வரை 309 பயனாளிகளுக்கு 133 எக்டர் பரப்பில் அமைத்ததற்கு ரூ.2.66 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வகை பந்தல் மூலம் கொடி வகை காய்கறிகளை சாகுபடி செய்வதால் நல்ல மகசூலும், அன்றாட வருமானமும் கிடைப்பதால் இத்திட்டத்திற்கு விவசாயிகளிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

    விவசாயிகள் அரசால் வழங்கப்படும் பல்வேறு திட்டங்களை அறிந்து கொண்டு, நல்ல முறையில் சாகுபடி செய்து தங்களது வாழ்வாதாரத்தினை பெருக்கி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனைத் தொடர்ந்து லக்கம்பட்டி பேரூராட்சி செங்கலரை பகுதியில் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர காய்கறி பந்தலை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    முன்னதாக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம் அளுக்குளி ஊராட்சி பிள்ளையார் கோவில் துறை பகுதியில் செயல்படும் கிராம நிர்வாக அலுவலகத்தினையும், கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் பள்ளியில் செயல்பட்டு வரும் ஆய்வகம் ஆகியவற்றினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    ஈரோடு மாவட்டத்தில் 20,000 ஏக்கருக்கு அதிகமான பரப்பில் வாழையானது கோபி செட்டிபாளையம் மற்றும் அதை சுற்றியுள்ள வட்டாரங்களில் விளைவிக்கப்பட்டு அறுவடை பின்செய் நேர்த்தி செய்வதற்காக கோபி செட்டிபாளையம் ஊராட்சி ஒன்றியம், அளுக்குளி குளிர்ப்ப தனக்கிடங்கு வளாகத்தில் ரூ.6.67 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டம் கீழ் முதன்மை பதப்படுத்தும் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒழுங்குமுறை விற்பனை கூடம்

    அதனைத் தொடர்ந்து கலெக்டர் வாழைக்கான முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத் தொடர்ந்து ஈரோடு விற்பனை குழு சார்பில் கோபி செட்டிபாளையத்தில் செயல்படும் 1000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்த மஞ்சள், பயறு வகைகள், புளி மற்றும் பழங்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பொருட்களின் இருப்பு குறித்து கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், கோபி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரவடிவேல், மைதிலி, கோபி தாசில்தார் ஆயிஷா ஆகியோர் உடனிருந்தனர்.

    ×