search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்வரத்து குறைந்தது"

    • நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.

    இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,712 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 712 கன அடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
    • காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.23 அடியாக உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.23 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,358 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

    • மேட்டூர் அணைக்கு வரும் நீர் வரத்து குறைந்ததால் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறப்பும் சரிந்துள்ளது
    • இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்


    திருச்சி:

    மேட்டூர் அணையிலிருந்து தற்போது வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    எனவே ஆங்காங்கே பெய்யும் மழை நீரும் காவிரியில் சங்கமிப்பதால் காவேரி நீர் வரத்து உயர்ந்தது. நேற்றைய தினம் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட 15 ஆயிரம் கன அடி நீர் மற்றும் 22,000 கன அடி மழை நீர் முக்கொம்பு மேலணைக்கு வந்தது.

    அதைத்தொடர்ந்து 5000 கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 32 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடம் ஆற்றிலும் திறந்து விடப்பட்டது.

    இந்த நிலையில் நேற்றைய தினம் மழையின் வேகம் குறைந்ததால் நீர்வரத்தும் சரிந்துள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி மழை நீர் வரத்து 17 ஆயிரம் கனஅடியாக குறைந்திருப்பதாக முக்கொம்பு நீர்வள ஆதாரத்துறையினர் தெரிவித்தனர்.

    இதில் வழக்கம்போல் 5000கன அடி நீர் காவிரி ஆற்றிலும், மீதமுள்ள 27 ஆயிரம் கன அடி நீர் கொள்ளிடத்திலும் திறந்து விடப்படுகிறது.

    இந்த நிலையில் முக்கொம்பு மேலனை நீர்வரத்தினை கலெக்டர் பிரதீப் குமார் பார்வையிட்டு நீர்வளத்துறை அலுவலர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார். அதன் பின்னர் முத்தரசநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பினை சரி செய்ய உத்தரவிட்டார்.

    அதைத் தொடர்ந்து அதிகாரிகள் அங்கு முகாமிட்டு குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கலெக்டர் ஆய்வின்போது கூட்டு குடிநீர் திட்ட நிர்வாக பொறியாளர் ராஜசேகர், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் நாக ஆனந்த், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் முருகானந்தம், தாசில்தார் குணசேகரன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.




    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.
    • அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

    இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டி யது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணை யில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது.

    ஆனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசன த்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகவும் உள்ளது. 

    • நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.
    • பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    ஈரோடு:

    பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் கோவை மாவட்டம் பில்லூர் அணை நிரம்பியது. அங்கிருந்து உபரி நீர் முழுவதும் அப்படியே பவானிசாகர் அணைக்கு வந்தது.

    இதன் காரணமாக கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டியது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளி யேற்றப்பட்டு வருகிறது.

    இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. முதலில் பவானிசாகர் அணையில் இருந்து 25 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது. எனினும் பவானிசாகர் அணை தொடர்ந்து 102 அடியில் நீடித்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 3,500 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து குடிநீருக்காகவும், பாசனத்தி ற்காகவும் 3,400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

    • ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
    • ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 32-வது நாளாக தடை விதித்துள்ளது.

    பென்னாகரம்,

    கர்நாடகா மற்றும் கேரளா மாநில நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழைபெய்து வருகிறது.

    இதனால் கர்நாடக கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த இரு அணைகளில் இருந்து உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்துவிட ப்பட்டுள்ளது.

    இதனால் நேற்று மாலை ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 45 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

    இன்றுகாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சத்து 35 ஆயிரம் கனஅடியாக குறைந்து வந்தது.

    ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி தெரியாத அளவிற்கு பாறைகள் மூழ்கிய படி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

    ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் இன்று 32-வது நாளாக தடை விதித்துள்ளது.

    நீர்வரத்து அதிகரிப்பால் வருவாய்த்துறையினர், போலீசார் காவிரி கரையோர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.

    ×