பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலை பகுதி உள்ளது.

கடந்த சில நாட்களாகவே நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்தது.

இந்நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 104.17 அடியாக உள்ளது. நேற்று வினாடிக்கு 2,712 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அணைக்கு வினாடிக்கு 712 கன அடியாக குறைந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2,200 கன அடி, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்திற்கு 400 கன அடி, குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கனஅடி என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com