பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது

நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது.அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசனத்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
Published on

ஈரோடு:

பவானிசாகர் அணை யின் நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கன மழை பெய்ததால் பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது.

இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து கடந்த 5-ந் தேதி பவானிசாகர் அணை 102 அடியை எட்டி யது. இதனைத் தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு வந்த நீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து பவானி ஆற்றில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் மழை பொழிவு இல்லாததால் பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக அணை யில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவும் குறைய தொடங்கியது.

ஆனால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 102 அடியிலேயே நீடித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி பவானி சாகர் அணை 102 அடியில் உள்ளது. அணைக்கு வினாடி க்கு 3600 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடி நீருக்காகவும், பாசன த்திற்காகவும் 3,500 கன அடி வீதம் தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இதேபோல் குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம் 27.41 அடியாகவும், வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் 33.46 அடியாகவும், பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம் 16.80 அடியாகவும் உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com