search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்தேக்கம்"

    • வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.
    • நீர் பாய்ச்சுவதற்கும், உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் சாலியமங்கலம் அருகிலுள்ள விழிதியூர் என்ற கிராமத்திலிருந்து இரும்புத்தலை என்ற கிராமத்தின் வழியாக சுமார் 12 கிலோ மீட்டர் தூரத்திற்கு அவளிவநல்லூர், குமாரமங்கலம், அரித்துவாரமங்கலம், கேத்தனூர், பெருங்குடி ஆகிய கிராமங்களுக்கு நீர் ஆதாரமாகவும் பல ஏக்கர் வயல்களுக்கு விவசாயம் செய்வதற்கு பயனுள்ளதாக விளங்கக்கூடிய வாய்க்காலின் நீரை ஒழுங்குபடுத்தும் நீர்த்தேக்கமானது திருவாரூர் மாவட்டம் பெருங்குடியில் அமைந்துள்ளது.

    அந்த நீர்த்தேக்கமானது பழுதடைந்த நிலையில் உள்ளது. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் வாய்க்காலில் வரக்கூடிய தண்ணீரை சரியான முறையில் பயன்படுத்த இயலாத சூழல் உருவாகியுள்ளது.

    மேலும் நீர் பாய்ச்சுவதற்கும் உபரி நீரை வெளியேற்றுவதற்கும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் தங்களின் சொந்த செலவில் சரி செய்து உள்ளனர். ஆனால் அது தற்காலிகமானது. அதுமட்டுமல்லாது வாய்க்காலை சரிவர தூர்வார வில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். எனேவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை உடனடியாக சீர் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×