search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிற்க கூடாது"

    • மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும்.
    • மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது.

    ஈரோடு:

    ஈரோடு மின் வாரியம் சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    மழைக்காலம் தொடங்க உள்ளதால் மின்சார வயரிங் வேலைகளை அரசு உரிமம் பெற்றுள்ள மின் ஒப்பந்ததாரர் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். ஐ.எஸ்.ஐ. முத்திரை பெற்ற தரமான மின் சாதனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.

    மின் கசிவு தடுப்பான் மூலம் மின் விபத்தை தடுக்கலாம். ஸ்டே கம்பிகளை மின் கம்பங்களில் கட்டக்கூடாது. குழந்தைகள், விலங்குகள் தொடாத வகையில் எர்த் பைப் அமைக்க வேண்டும்.

    மின் கம்பத்துக்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கொடி கயிறு கட்டி துணி உலர்த்த போடக்கூடாது. குளியல் அறை, கழிப்பறைகளில் ஈரமான இடங்களில் சுவிட்ஜ் அமைக்கக்கூடாது.

    மின் கம்பங்களில் அருகே கம்பிகளில் கால்நடைகளை கட்டக்கூடாது. அறுந்து போகும் மின் கம்பிகள் தெரிந்தால் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவியுங்கள்.

    மின் கம்பங்கள் மீது வளர்ந்திருக்கும் மரக்கிளைகளை அகற்ற வேண்டும். மின்வாரிய அலுவலர்கள் மூலமும் அகற்றலாம். இடி,மின்னலின் போது வெட்டவெளியில் நிற்க கூடாது.

    மின்சாரம் தொடர்பாக மின்னகம் எண்: 9498794987, வாட்ஸ் ஆப் எண்: 94458 51912 என்ற எண்ணுக்கு புகாராகவும், புகைப்படமாகவும் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×