search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிரந்தர வேலை"

    • இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
    • அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத்துள்ளோம்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்.எல்.சி. நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார் கள். இவர்களில் தனியார் காண்டிராக்ட் ஒப்பந்த தொழிலாளர்கள் 13 பேர் இன்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். என்.எல்.சி. சுரங்கம் -1 பாயிண்ட் நுழைவு வாயில் முன் அவர்கள் உள்ளிருப்பில் ஈடுபட்ட னர். அவர்கள் என்.எல்.சி. நிறுவனத்துக்கு வீடு, நிலங்களை கொடுத் துள்ளோம். பாதிக்கப்பட்ட எங்க ளுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட் டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    • மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமனை ஆணை வழங்கிட வேண்டும்.
    • பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும்.

    தென்காசி:

    தென்காசியில் மக்கள் நல பணியாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து தென்காசி புதிய பஸ் நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தென்காசி மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் வாசுதேவநல்லூர் எஸ். முருகன் தலைமை தாங்கினார். தென்காசி மாவட்ட மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தென்காசி முத்துசாமி வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு மக்கள் நல பணியாளர்களுக்கு பணி நிரந்தரத்துடன் கூடிய பணி நியமனை ஆணை வழங்கிட வேண்டும். மக்கள் நலப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும்.

    நீண்ட தொலை தூரங்களில் பணிபுரிந்து வரும் மக்கள் நலப் பணியாளர்களை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஊராட்சிக்கு பணியிட மாறுதல் வழங்க அரசு உத்தரவிட வேண்டும். கடந்த 1-ந் தேதி அன்று பணியில் சேர்ந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் இறந்துவிட்ட பணியாளர்களின் வாரிசுகளுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புதியவன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் திருமலை முருகன், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் வெங்கடேஷ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் க.மார்த்தாண்ட பூபதி, தமிழ்நாடு வருவாய்த்துறை ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.கே.மாடசாமி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர். முடிவில் தென்காசி மாவட்ட மக்கள் நல பணியாளர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் அருணாசலம் நன்றி கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் தென்காசி மாவட்ட துணைத் தலைவர் குருவிகுளம் தர்மராஜ், மேலநீலிதநல்லூர் லெட்சுமி, துணைச் செயலாளர்கள் கடையநல்லூர் கருப்பசாமி, சங்கரன்கோவில் சண்முகச்சாமி, மணி , மாநில செயற்குழு உறுப்பி னர்கள் சங்கரன்கோவில் மாரியப்பன், செங்கோட்டை பண்டார சிவன், தென்காசி அந்தோணி செல்லத்துரைச்சி, கடையநல்லூர் ராஜேந்திரன் மற்றும் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பணிபுரிந்து வரும் மக்கள் நல பணியாளர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    அதனைத்தொடர்ந்து மக்கள் நலப்பணியாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலெக்டர் துரை ரவிச்சந்திரனை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

    ×