search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து வங்காளதேசம்"

    • நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது.
    • வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் 5 ஆட்டங்கள் ஒதுக்கப்பட்டன. கடந்த 8-ந்தேதி நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் மோதியது. இப்போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நாளை 2-வது ஆட்டம் நடக்கிறது. இது உலக கோப்பை போட்டி தொடரின் 9-வது லீக் ஆட்டமாகும். இதில் நியூசிலாந்து-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    நியூசிலாந்து, தான் மோதிய 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றது. இங்கிலாந்து, நெதர்லாந்து அணிகளை வீழ்த்தியது. நியூசிலாந்து ஹாட்ரிக் வெற்றி பெறும் முனைப்பில் உள்ளது. அந்த அணியில் கான்வே, ரவீந்திரா, வில்யங், மிட்செல் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் போல்ட், ஹென்றி, சான்ட்னர் ஆகியோர் உள்ளனர். அந்த அணி பேட்டிங், பந்து வீச்சில் சமபலத்துடன் உள்ளது.

    வங்காளதேசம் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்தது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோற்றது. வங்காளதேச அணி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆனால் பலம் வாய்ந்த நியூசிலாந்துக்கு எதிராக கடுமையாக போராட வேண்டியதிருக்கும்.

    அந்த அணியில் கேப்டன் ஷகிப்-அல்-ஹசன், லிட்டன் தாஸ், நஜ்முல் ஹூசன் சாண்டோ, முஷ்பிகுர் ரகுமான், மெகதி ஹசன் மிராஸ், தஸ்கின் அகமது, ஷொரிபுல் இஸ்லாம் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    லக்னோவில் இன்று நடக்கும் 10-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இப்போட்டி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

    ×